07.02.1924 அன்று சட்டம் பற்றிய விவாதத்தில் சுப்பராயன் பேசும்போது.
“மிகச் சாதாரணமான அலுவலர்கள் கையில் அதிகாரம் உட்கார்ந்து கொண்டு நிர்வாகத்தைப் பாழ்படுத்துகிறது. சிலர் நியாயமாக இருந்தாலும் அதிகார வர்க்கத்தின் மிகக் குறுகிய வட்டத்திற்குள்ளேயே அவர்கள் வளர்வதால் அவர்களால் பொதுமக்களின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ள முடிவதில்லை.
சட்டத்துறையைப் பற்றி எத்தனையோ மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் வழக்கறிஞர்கள் உதவியால் நல்ல தீர்ப்புக்களைக் கொடுத்து வருகின்றன” என்று குறிப்பிட்டார். அது இன்றும் பொருத்தமாகவே உள்ளது.
நிலவரி பற்றி 28.03.1924 அன்று சுப்பராயன் சபையில் கீழ்வருமாறு பேசினார்.
“நிலவரி விஷயத்தில் தெலுங்குப் பகுதி, தமிழ்ப்பகுதி எனப் பிரித்துப் பார்ப்பதால் விவசாயிகள்தான் பாதிக்கப்படுவார்கள்”. சட்டத்துறை தொடர்புடைய செலக்ட் கமிட்டி சர் சி.பி. இராமசாமி அய்யர் தலைமையில் நியமிக்கப்பட்டது. சுப்பராயன் அதில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
லிபரல் கட்சியைச் சேர்ந்த சி.வி.எஸ். நரசிம்மராஜுலு தலைமையில் தேசியவாதிகளும், முற்போக்கு எண்ணம் கொண்ட தலைவர்களும் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சியை உருவாக்கினர். ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து சுப்பராயன் நீதிக்கட்சியைத் தோற்கடிக்கத் தேர்தலில் இறங்கினார். ஐக்கிய தேசியக் கட்சி சுயேச்சையாகவே கருதப்பட்டது.
✽✽✽
பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்
50