உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11. முதலாவது அமைச்சர்

மூன்றாவது பொதுத் தேர்தல்

1926 நவம்பர் மாதம் மூன்றாவது பொதுத் தேர்தல் நடைபெற்றது. 1920 ஆம் ஆண்டு 63 உறுப்பினர்களையும், 1923 ஆம் ஆண்டு 44 உறுப்பினர்களையும் கொண்டு ஆட்சியை நடத்திய நீதிக்கட்சி இத்தேர்தலில் 21 இடங்களிலேயே வெற்றி பெற்றது. சுயராஜ்யக் கட்சி 41 இடங்களையும், சுப்பராயன் தலைமை தாங்கிய ஐக்கிய தேசியக் கட்சி 36 இடங்களையும் பிடித்தது. ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சுயேச்சை உறுப்பினர்களாகவே கருதப்பட்டனர். இத்தேர்தலில் சுப்பராயன் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியின்றி வெற்றி பெற்றார்.

சுயராஜ்யக் கட்சியின் காலதாமதம்

22.11.1926 அன்று அதிக உறுப்பினர்களைக் கொண்ட சுயராஜ்யக் கட்சியை கவர்னர் அமைச்சரவை அமைக்க அழைத்தார். மூன்று அமைச்சர்களின் பெயரையும் பரிந்துரைக்குமாறு கவர்னர் கேட்டுக் கொண்டார். டிசம்பரில் கூடும் காங்கிரஸ் மாநாட்டின் கருத்தறிந்த பின் அமைச்சர்கள் பெயரைப் பரிந்துரைப்பதாகச் சுயராஜ்யக் கட்சியினர் கூறினர். கவர்னர் அதுவரை பொறுத்திருக்க முடியாது என்று கூறவே 21 உறுப்பினர்களைக் கொண்ட நீதிக்கட்சி ஆட்சி அமைக்கும் காரியத்தில் ஈடுபட்டது.

சுப்பராயனுக்கு அழைப்பு

அதிக எண்ணிக்கை கொண்ட சுயராஜ்யக் கட்சி ஆட்சி அமைக்கக் காலதாமதம் செய்வதையும், குறைந்த உறுப்பினர்களைக் கொண்ட நீதிக்கட்சி குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க முயல்வதையும் கண்ட


பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்

51