கவர்னர் 36 உறுப்பினர்களைக் கொண்ட சுயேச்சைகளின் சார்பில் மந்திரி சபை அமைக்கச் சுப்பராயனை அழைத்தார். சுயராஜ்யக் கட்சியினரும் நீதிக்கட்சி ஆட்சிக்கு வருவதை விட சுப்பராயன் தலைமையில் ஆட்சி அமைவதை விரும்பினர். ஆனால் சுப்பராயனுக்கு ஆதரவுக் கடிதம் கொடுக்கத் தயங்கினர். அதனால் சுப்பராயன் ஆட்சி அமைக்கத் தயங்கினார்.
முதல் தமிழர் முதலாவது அமைச்சர் சுப்பராயன்
29 உறுப்பினர்களை நியமிக்க வேண்டிய கவர்னர் விஷ்கவுண்ட் கோஷன் 34 உறுப்பினர்களை நியமித்து தம் நியமன உறுப்பினர் ஆதரவை சுப்பராயனுக்கு அளிக்கச் செய்தார். 132 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் 70 உறுப்பினர்கள் (36+34) ஆதரவைப் பெற்று சுப்பராயன் ஆட்சி அமைத்தார். 04.12.1926 அன்று முதல் தமிழர் அமைச்சரவையைச் சுப்பராயன் அமைத்தார். சுப்பராயன் முதலாவது அமைச்சர். பிற இரு அமைச்சர்கள் ஏ. அரங்கநாத முதலியார், ஆர். டபிள்யூ. ஆரோக்கியசாமி ஆகியோர் ஆவர். சுப்பராயன் உள்ளாட்சி, கல்வி, இரயில்வே, நூலகம், மியூசியம், மிருகக் காட்சி, பூங்கா முதலிய துறைகளைத் தன் பொறுப்பில் வைத்துக் கொண்டார். சுப்பராயன் அமைச்சரவை சுயேச்சை அமைச்சரவை என்றே அழைக்கப்பட்டது. சுப்பராயன் முதலாவது அமைச்சர் என்று அழைக்கப்பட்டார்.
மேட்டூர் அணை கட்டத் தொடங்குதல்
சுமார் 20 ஆண்டுகள் தொடங்குவதில் இழுபறியாக இருந்த மேட்டூர் அணை கட்டும் திட்டம் சுப்பராயன் ஆட்சி அமைந்த பின்னர்தான் கட்டத் தொடங்கப்பட்டது. கட்டுமானம் சுண்ணாம்பிலா,
பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்
52