விசாகப் பட்டினத்தில் ஆந்திரப் பல்கலைக்கழகம்
பனகல் அரசர் என்று அழைக்கப்பட்ட பனகண்டி இராமராயனிங்கர் சென்னை மாகாணத்தில் முதலாவது அமைச்சராக இருந்தபோது (19.11.1923 - 03.12.1926) 1925ஆம் ஆண்டு சென்னையைப் போல் ஆந்திரப் பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தார். பல்கலைக்கழக அமைப்புப் பணியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இடப்பிரச்சனையே காரணம்.
டாக்டர் சுப்பராயன் ஆட்சி அமைந்தபின் சட்டமன்ற ஆந்திர உறுப்பினர்கள் அனைவரையும் தன் அறைக்கு அழைத்துப்பேசி பல கல்லூரிகள் உள்ள துறைமுக நகரமான விசாகப்பட்டினத்தில் பல்கலைக்கழகம் அமையவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுக் கல்வியமைச்சரும் முதலாவது அமைச்சருமான டாக்டர் சுப்பராயன் தீர்மானத்தை முன்மொழிய நான்கில் மூன்று பங்கு உறுப்பினர்கள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் அத்தீர்மானத்தை 1929ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம் நாள் அங்கீகரித்தார்.
பனகல் அரசர் காலத்தில் 1925ல் இருந்து நான்காண்டு காலம் முடிவாகாமல் இருந்த ஆந்திரப் பல்கலைக்கழக அமைப்பை டாக்டர் சுப்பராயன் 1929ல் சுமூகமாக முடித்து வைத்தார்.
இந்து சமய அறநிலையப் பாதுகாப்புச் சட்டம்
சென்னை மாகாணத்தில் உள்ள கோயில்களில் அசையும் - அசையாச் சொத்து முழுவதும் முன்பு கோயில் குருக்கள் வசமே இருந்தன. இறைவன் திருமேனிகட்குப் பூட்டப்படும் நகைகள், விலை உயர்ந்த ஆடைகள், கோயிலுக்குரிய நிலங்களில் விளையும் தானியங்கள் அனைத்தும் குருக்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. குறிப்பாகத் தலைமைக் குருக்கள் தான் அனுபவித்ததுபோக எஞ்சியவைகளை மற்ற குருமாருக்கு அளிப்பர்.
சென்னை மாகாண முதலாவது அமைச்சராக இருந்த பனகல் அரசர் பனகண்டி இராமராயனிங்கர் சட்டசபையில் “இந்து சமய
பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்
59