1930 ஆம் ஆண்டு நடைபெற்ற சுயமரியாதை இயக்க மாநாட்டில் பெரியார் அவர்கள் டாக்டர் சுப்பராயனைப் பாராட்டித் தீர்மானம் நிறைவேற்றினார்.
தீர்மான வாசகம் “ஆதிதிராவிடர் போன்ற தாழ்த்தப்பட்ட மக்கள் தேவஸ்தானம் என்ற சொல்லை உச்சரிக்கவும், நினைக்கவும் கூடாதென்ற கட்டுப்பாட்டை உடைத்து ஆதிக்க வெறி கொண்டவர்களின் மனப்பான்மைக்குச் சாவுமணி அடித்த டாக்டர் சுப்பராயன் அவர்களைப் பாராட்டுகிறது” என்பதாகும்.
சென்னை உள்ளாட்சிக் கழகங்கள் திருத்த மசோதா
1929 அக்டோபர் மாதம் சென்னை மாகாண சட்டசபையில் உள்ளாட்சித் துறைக்கும் பொறுப்பு வகித்த முதலாவது அமைச்சர் சுப்பராயன் உள்ளாட்சிக் கழகங்கள் திருத்த மசோதாவைக் கொண்டு வந்து விவாதம் நடத்திச் செலக்ட் கமிட்டிக்கு அனுப்பி உரிய திருத்தங்களுடன் சட்ட சபையில் 28.01.1930 அன்று நிறைவேற்றிச் சட்டம் ஆக்கினார். அவை உள்ளாட்சி நிர்வாகத்துக்கு இன்றும் சிறந்த வழிகாட்டியாக உள்ளது.
அவற்றின் முக்கிய அம்சங்கள்,
கிராமப் பஞ்சாயத்துக்கள் தங்களுக்குத் தேவையான வரியைத் தாங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம். கிராம வளர்ச்சிக்கு அவை பயன்படுத்துவதற்கான திட்டமும் செயல்பாடுகளும் வரையறுக்கப்பட வேண்டும்.
கிராம நிர்வாகத்தில் நியமன உறுப்பினர் கிடையாது. (மாவட்டக் கழகங்களில் அன்று ஐரோப்பியர், ஆங்கிலோ இந்தியர் நியமன முறை இருந்தது).
உள்ளாட்சித் தேர்தலைக் கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.
வருமானத்தின் அடிப்படையில்தான் வரி விதிக்க வேண்டும். முதலீட்டின் அடிப்படையில் வரி இருக்கக் கூடாது.
பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்
61