உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதுபற்றி தென்னிந்திய அரசியல் ஆராய்ச்சியாளரும், கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியருமான உஜென எஃப் இன்ஸிக் (Ugene F Inschik) “The communal G.O. was the forebear of the Madras Public Service Commission formed in 1929 which is the first provisional public service commission in India. Its establishment was a direct result of·Non Brahmin movement and illustrates the provisional affairs in terms of the Backward class movement in India generally” என்று எழுதியுள்ளார். இன்னும் பல சமூகவியல் அறிஞர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றது.

இனவாரி ஒதுக்கீடு

18.03.1930 அன்று மாகாண சட்ட சபையில் இனவாரி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் நடக்கையில் சுப்பராயன் கூறிய கருத்துரை இந்தியச் சமுதாய ஒற்றுமைக்கு இன்றைக்கும் வழிகாட்டியாகத் திகழ்கிறது.

நாம் ஒன்றுபட்ட தேசமாக நின்று நம்மை நாமே ஆள வேண்டும் என்ற உணர்வில் இப்போது என் கருத்தை இந்தச் சபையில் சமர்ப்பிக்கிறேன்.

உலகின் கண்முன்னால் ஒரு தன்மான நாடாக நம்மை அடையாளம் காட்டிக் கொண்டு தலை நிமிர்ந்து நிற்க விரும்புகிறோம். அதே சமயத்தில் நம் முன்னே பெரும்பான்மையினர், சிறுபான்மையினரை ஒதுக்கி விட அனுமதிக்க மாட்டோம் என்பதையும் உலகிற்கு நிரூபிக்க விரும்புகிறோம். அது நமது கடமையும் கூட. இந்தியக் குடும்பங்களில் பாகுபாடு இருக்கக் கூடாது. அதைக் கடைப்பிடிக்கவும் அனுமதிக்கக்கூடாது. இவை யாவும் வெறும் அலங்காரத்திற்காகக் கூறப்படுபவையல்ல. ஒவ்வொரு இந்தியர் மனதிலும் இருந்து கிளம்பும் கொள்கை முழக்கமாக இருக்க வேண்டும்.

நமது அரசியல் அமைப்பை உருவாக்கும் போது நம்மிடையே சமூக அங்கமாக ஒளிர்விடும் சிறுபான்மையினரை நம்மில் ஒருவராக உணரும் வண்ணம் அவர்களது தேவைகள் அனைத்தும் பாதுகாக்கப்-


பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்

63