1920 செப்டம்பர் 4 - 8 நாட்களில் காங்கிரஸ் கட்சியின் சிறப்பு மாநாடு கல்கத்தாவில் நடைபெற்றது. சுப்பராயன் சென்னை மாகாணப் பிரதிநிதிகளில் ஒருவராகக் கலந்து கொண்டார்.
1920 டிசம்பரில் நாக்பூரில் காங்கிரஸ் கட்சியின் 38 ஆம் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் சுப்பராயன் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும், நிர்வாகக் கமிட்டியின் துணைக் குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.
காங்கிரஸ்காரரான சுப்பராயன் காங்கிரஸ் தேர்தலில் பங்கு கொள்ளக் கூடாது என்று கூறியதால் 1920 டிசம்பர் மாதம் சுயேச்சையாகப் போட்டியிட்டார். வெற்றி பெற்ற பின் தன் கல்லூரித் தோழர் பனகல் அரசர் பனகண்டி ராமராயனிங்கர் கேட்டுக் கொண்டபடியாலும், அமைச்சர் கே.வி. ரெட்டிக்கு பாராளுமன்றச் செயலாளராக கவர்னரால் நியமிக்கப்பட்ட காரணத்தாலும் நீதிக்கட்சியில் இணைந்தார்.
1920ல் பதவியேற்ற ஏ. சுப்பராயலு ரெட்டியார், பனகல் அரசர் பனகண்டி ராமராயனிங்கர், கே.வி. ரெட்டி மூவரும் தெலுங்கர்கள். 17.12.1920ல் பதவியேற்ற முதலாவது அமைச்சர் ஏ. சுப்பராயலு ரெட்டியார் உடல்நிலை காரணமாக 11.07.1921ல் ராஜினாமா செய்தார். பனகல் அரசர் முதலாவது அமைச்சராகி தெலுங்கரான ஏ.பி. பாட்ரோ சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
இரண்டு அமைச்சரவையிலும் ஒரு தமிழருக்குக் கூட இடம் அளிக்காத காரணத்தால் சுப்பராயன், கோவை டி.ஏ. இராமலிங்கம் செட்டியார் போன்றோர் நீதிக் கட்சியிலிருந்து விலகி அமைச்சரவை எதிர்ப்பு அணி என்று தங்களை அறிவித்துக் கொண்டனர்.
1923ல் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 98 இடங்களில் நீதிக்கட்சி 44 இடங்களையும், சுயராஜ்யக்கட்சி 11 இடங்களிலும், நீதிக் கட்சியை எதிர்த்துப் போட்டியிட்ட சுப்பராயன் தலைமையிலான எதிர்ப்பு அணி 37 இடங்களிலும், லிபரல்கட்சி 6 இடங்களிலும் வென்றது.
பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்
68