உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராமசாமி நாயக்கர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர், செயலாளர் பதவி வகித்தவர். நாயக்கர் சாதிப் பெயரை நீக்கிய அவரை இராமசாமி என்று அழைப்பது பொருத்தமில்லை எனக் கருதி “பெரியார் இராமசாமி” என அழைத்தனர். “பெரியார்” என்ற பெயரே நிலைத்து விட்டது. 1921ல் ஈரோட்டில் பெரியார் வீட்டில் காந்திஜி தங்கிய போதுதான் கள்ளுக்கடை மறியல் திட்டம் உருவானது.

அதற்குக் காரணமாக இருந்தவர்கள் பெரியாரின் மனைவி நாகம்மையாரும், தங்கை கண்ணம்மாளும் ஆவர். பெரியார் தன் தோட்டத்தில் இருந்த 500 தென்னை மரங்களை வெட்டினார். கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். கதர் இயக்கத்துக்குத் தலைமை தாங்கி தன் வீட்டிலேயே கதர்க்கடை தொடங்கியதுடன் ஊர் ஊராகச் சென்று கதர் விற்றார். 1925ல் தான் தொடங்கிய “குடியரசு” வார இதழில் இராட்டையில் நூல் நூற்கும் காட்சியையும், காந்திஜி நெசவு நெய்யும் காட்சியையும் அச்சிட்டார். காங்கிரஸ் கொள்கைப்படி ஈரோட்டில் தன் சொந்த இடத்தில் இந்தி கற்பிக்கும் பள்ளி நடத்தினார். எனவே அவர் காந்தி ஆசிரமத்தைத் தொடங்கி வைப்பது பொருத்தம் என்று இராஜாஜி எண்ணினார்.

கதர் இயக்கம், மது விலக்கு, தீண்டாமை ஒழிப்பு, சுதேசிப் பொருள் உற்பத்தி மூலம் கிராமப் பொருளாதார முன்னேற்றம், பெண்விடுதலை, கல்விப் பணி, அரிசன முன்னேற்றம் போன்ற பணிகளை காந்தி ஆசிரமம் சிறப்புடன் மேற்கொண்டது.

இராஜாஜி பத்து ஆண்டுகள் ஆசிரமத்தில் தங்கிப் பணியாற்றினார். இரத்தின சபாபதிக் கவுண்டர் எல்லா உதவிகளையும் மனமுவந்து செய்ததுடன் கதர் உடுத்தி அவரும் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டார். காந்திஜி இங்கு இருமுறை வந்து சில நாட்கள் அவருக்கு அமைக்கப்பட்ட குடிலில் தங்கினார். இங்குதான் இராஜாஜியின்


பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்

80