உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகள் இலட்சுமி - காந்திஜியின் மகன் தேவதாஸ் திருமணம் உறுதி செய்யப்பட்டது.

இராஜாஜி ஆசிரமத்தின் மூலம் “விமோசனம்” என்ற தமிழ் இதழையும், “PROHIBITION” என்ற ஆங்கில இதழையும் நடத்தினார். பல தேசியத் தலைவர்கள் காந்தி ஆசிரமம் வந்து பார்வையிட்டு அதன் பணிகளைப் பாராட்டியுள்ளனர்.

புதுப்பாளையம் காந்தி ஆஸ்ரமத்தில் காந்தியடிகள், அருகில் ராஜாஜி
புதுப்பாளையம் காந்தி ஆஸ்ரமத்தில் காந்தியடிகள், அருகில் ராஜாஜி

இந்திய நாடெங்கும் புதுப்பாளையம் காந்தி ஆசிரமத்தின் புகழ் பரவியது.

ஜவஹர்லால் நேரு, லால்பகதூர் சாஸ்திரி, பாபு ராஜேந்திர பிரசாத், சர்தார் வல்லபாய் படேல், மகாதேவ தேசாய், ஜி.டி. பிர்லா, ஜமன்லால் பஜாஜ், ஜே.சி. குமரப்பா, ஆச்சார்ய கிருபளானி, தக்கர் பாபா முதலிய பலர் ஆசிரமம் வந்து பணிகளைப் பாராட்டியுள்ளனர்.

முதலாவது அமைச்சராக சுப்பராயன் இருந்த போது புதுப் பாளையம் கிராமத்தில் புதிய பள்ளி திறக்க ஏற்பாடு செய்தார். தாழ்த்தப்பட்டவர் வாழும் பகுதியில்பள்ளி அமைக்கப்பட்டது. கடிதப் போக்குவரத்து சிரமம் இன்றி நடைபெற ஆசிரம வளாகத்தில் ஒரு அஞ்சல் நிலையத்தை சுப்பராயன் ஏற்படுத்திக் கொடுத்தார்.

சுப்பராயன் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போது அரசினரால் ஆசிரமத்துக்கு ஏற்பட்ட தடைகளையெல்லாம் சுப்பராயன் தலையிட்டு நீக்கினார். ஆசிரமத்தை மூட அரசு எண்ணியபோதும், அரசுடைமை ஆக்க முயன்றபோதும் சுப்பராயன் தலையிட்டு


பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்

81