உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆசிரமத்தைப் பாதுகாத்தார்.

சுப்பராயன் தந்த இடத்தில் கட்டிய அரிசன மாணவர் இல்லத்தின் இன்றைய நிலை
சுப்பராயன் தந்த இடத்தில் கட்டிய அரிசன மாணவர் இல்லத்தின் இன்றைய நிலை

1934ஆம் வருடம் ஆகஸ்டு முதல் நாள் சபர்மதி ஆசிரமத்தில் காந்திஜியை அரசு கைது செய்தது. எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டங்கள் நடைபெற்றது.

இராஜாஜி ஆசிரமப் பொறுப்பை சுப்பராயனிடம் ஒப்படைத்துவிட்டு திருச்செங்கோட்டில் 16 தொண்டர்களுடன் போராட்டம் நடத்திக் கைதானார். திருச்செங்கோடு பள்ளியில் படிக்கும் அரிசன மாணவர்கட்கு ஆசிரமம் சார்பில் ஒரு விடுதி கட்ட விரும்பினர். யாரும் இடம் கொடுக்க மறுத்த நிலையில் சுப்பராயன் தன் சொந்த நிலத்தில் இடம் அளித்தார்.

அங்கு கட்டப்பட்ட விடுதியை 1935 ஆம் வருடம் பாபு ராஜேந்திர பிரசாத் திறந்து வைத்தார். இப்போது விடுதி இயங்குவது இல்லை. இன்றும் காந்தி ஆசிரமம் தன் பணியைச் சிறப்புடன் தொடர்கிறது.

✽✽✽


பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்

82