உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதப் பெருமகன் சுப்பராயன்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராஜாஜி மந்திரிசபை அமைக்க மறுக்கவே கவர்னர் லிபரல் கட்சியைச் சேர்ந்த வி.எஸ். சீனிவாச சாஸ்திரியை ஆட்சி அமைக்க அழைத்தார். அவர் மறுத்து விட்டார்.

கே.வி. ரெட்டி மந்திரி சபை

நீதிக் கட்சியினரும் 26.03.1937 ல் கூடி “அமைச்சரவை அமைப்பதில்லை” என்று கவர்னரிடம் தெரிவித்தனர். ஆனால் நீதிக்கட்சியிலிருந்த தலைவர்கள் சிலர் கே.வி. ரெட்டி தலைமையில் கூடி “நாங்கள் நீதிக் கட்சியிலிருந்தாலும் எங்களை சுயேச்சைகளாகக் கருதி அமைச்சரவை அமைக்க அழைக்க வேண்டும்” என்று கேட்டுக்கொள்ள கவர்னர் இசைந்தார்.

01.04.1937ல் கே.வி. ரெட்டியை முதலமைச்சராகக் கொண்டு ஏ.டி. பன்னீர் செல்வம், எம்.ஏ. முத்தைய செட்டியார், பி. கலிபுல்லா சாகிப் பகதூர், எம்.சி. ராஜா, ஆர்.எம். பாலத் ஆகியோர் அமைச்சராகப் பதவி ஏற்றனர். இந்த இடைக்கால அரசு பெரும்பான்மை இன்மையால் சட்டசபையைக் கூட்டாமலேயே அதிகாரம் செய்தது. 14.07.1937 வரை இந்த அமைச்சரவை நீடித்தது.

இராஜாஜி மந்திரி சபை

காங்கிரஸ் கட்சித் தலைமை 08.07.1937 அன்று மாகாணத் தலைவர்களை ஆட்சி அமைக்க அனுமதித்தது. 15.07.1937ல் இராஜாஜியைத் தலைவராகக் கொண்ட அமைச்சரவை பதவி ஏற்றது. சுப்பராயன் கல்வி, சட்ட அமைச்சர் ஆனார். மற்ற அமைச்சர்கள் டி. பிரகாசம், யாகூப்கான், டி.எஸ்.எஸ். இராஜன், வி.ஐ. முனுசாமிப் பிள்ளை, வி.வி.கிரி, எஸ். இராமநாதன்பிள்ளை, கே. ராமன் மேனன், பி. கோபால் ரெட்டி ஆகியோர் ஆவர். எதிர்க்கட்சித் தலைவர் ஏ.டி. பன்னீர் செல்வம்.

1926-30 ஆம் ஆண்டுகளில் முதலாவது அமைச்சராக இருந்தபோதே மதுவிலக்கிற்கு அடித்தளமிட்ட சுப்பராயன் 1937ல் அமைச்சராகப் பதவி ஏற்ற இரண்டு மாதங்களில் இராஜாஜியின்


பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்

85