பள்ளிகளில் கூடுதலாக ஐந்தாம் வகுப்பைக் கொண்டு வருதல், ஓராசிரியர் பள்ளிகளை மூட இயக்குநர் உத்தரவிட்டாலும் இசுலாமியப் பெண்கள் பாதிக்கப்படுவதால் அத்திட்டத்ததைக் கைவிடுதல் போன்றவை கல்வியமைச்சர் பொறுப்பில் இருந்த சுப்பராயன் செய்த கல்விப் பணிகளாகும். இயங்கிக் கொண்டிருக்கும் பள்ளியில் மாணவர் வருகை குறைந்தால் ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டும் என்பது சுப்பராயன் கருத்தாகும். 24.11.1937 அன்று சென்னை மாகாணம் முழுவதும் பள்ளிகளில் விடுதிகள் ஏற்படுத்த அரசு அனுமதியைச் சுப்பராயன் சட்டமாக நிறைவேற்றினார். முதியோர் கல்வித் திட்டமும் சில இடங்களில் கொண்டு வரப்பட்டது.
பள்ளிகளில் இந்தி
1937 தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற சென்னை, பம்பாய், ஒரிசா, மத்தியப் பிரதேசம், பீகார், ஐக்கிய மாகாணம், வடமேற்கு எல்லை மாகாணம் ஆகிய ஏழு மாகாணங்களில் சில பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாக வைக்கப்பட்டது. இது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று. சென்னை மாகாணத்தில் தமிழ்ப் பகுதியில் 60 பள்ளிகள், ஆந்திரப் பகுதியில் 54 பள்ளிகள், கேரளப் பகுதியில் 7 பள்ளிகள், கர்நாடகப் பகுதியில் 4 பள்ளிகள் ஆக 125 பள்ளிகளில் மட்டுமே பாடமாக வைக்கப்பட்டன.
இது அகில இந்தியக் காங்கிரசின் கொள்கையே தவிர கல்வியமைச்சர் சுப்பராயன் அவர்களின் தனித் திட்டம் அல்ல. காங்கிரஸ் அமைச்சரவை என்பதால் அதை நிறைவேற்ற வேண்டிய சூழ்நிலை அமைச்சர் சுப்பராயன் அவர்கட்கு ஏற்பட்டது.
சுப்பராயன் தான் முதலாவது அமைச்சராக இருந்த போது, பள்ளிகளில் (குரூப் சி பிரிவில்) இந்தி விருப்ப பாடமாக இருந்தது என்றும், மாணவர்கள் இந்தியை ஆர்வமுடன் படித்தனர் என்றும், வேறொரு மொழியால் தமிழ் பாதிக்கப்படும் என்பது வீணான பயம் என்றும், இந்தியாவிற்கு ஒரு பொது மொழி தேவை என்றும், தமிழ் வளர்ச்சிக்காக உறுதியாகப் பாடுபடுவோம் என்றும் கூறினார்.
பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்
87