பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 பாரதிக்குப் பின் ஆகாயத்தில் பறந்து, திடீரென அம்மரக்கிளைகளில் உட் காரும் பகதிகள், உயிர் நீத்தனவையே போல், கிளைகளில் சமைந்து ஒன்ருகும். அவற்றின் கூவல்கள், மரண ஒலியாக, விட்டுவிட்டுக் கேட்டுக் கொண்டிருந்தது. சிறிது சென்று, ஒன்றிரண்டாக, புத்துயிர் பெற்றவை போல கிளைகளை விட்டு ரிவ்வெணப் பறந்து சென்றன. அதிக நேரம் அம் மரத்தின் தோற்றத்தைப் பற்றி நான் யோசித்துக் கொண் டிருக்கவில்லை காலையிலிருந்து உக்கிரமான வெய்யிலில் பாதி மூடிய கண்களுடனும் வெற்று வெளிப்பார்வையுடனும் கண்ட தோற்றங்கள், என் நண்பனுக்கு எவ்வெவ்வகை மனக்கிளர்ச்சிகளுக்குக் காரணமாயினவோ என்பதை என்னுல் அறிந்து கொள்ள முடியவில்லை.” மற்றவனின் மனக்கிளர்ச்சியை மெளனி அழகிய சொற் களில்-இனிய கவிதை மாதிரி-வர்ணிக்கிரு.ர். "ஆமாம்; அதுதான். ஆகாயத்தில் இ ல் லா த பொருளைக் கண்மூடிக் கைவிரித்துத் தேடித் துளாவுவதைப் பார்த்தாயா? ஆடி அசந்து நிற்கிறது. அது; ஆட்டம் ஒய்ந்து நிற்கவில்லை. மெல்லெனக் காற்று மேற்கிலிருந்து அடிக்கும் காதல் முகந்த மேகங்கள். கனத்து, மிதந்து வந்து அதின் மேல் தங்கும், தாங்காது தளர்ந்து ஆடும். விரிக்கப்பட்ட சாமரம் போன்று ஆகாய வீதியை மேகங்களினின்றும் சுத்தப் படுத்துவதா அது? அல்லது துளிர்க்க அது மழைத் துளிகளுக்கு ஏங்கியா நிற்கிறது? எதற்காக?” கதாபாத்திரத்தின் தடுமாற்றநிலையைச் சித்திரிக்கையில் மெளனி நடையில் முரண்பாடுகள் எனத் தோன்றும் சொற் பின்னல்கள் தலைகாட்டுகின்றன; - 'அவன் கண்கள், காணமுடியாத அசரீரியான ஏதோ ஒரு வஸ்துவைப் பார்க்கத் துடிப்பலை போல, என்று