100
பாரதிக்குப் பின்
ஆழ்ந்த அனுபவத்திலும், அந்தரங்கத்திலும் மௌனமாகக் கொள்ளும் கூடமான பேரின்ப உணர்ச்சியை வளர்க்கச் சிற்பித்தவை தானா கோவில்கள்? கொத்து விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும். அதன் பிரகாரத்தில் நடமாடும் பக்தர்களுக்கும் அவர்கள் நிழலுக்கும் வித்தியாசம் காணக்கூடாத திகைப்பைக் கொடுக்கும் அச்சந்நிதானம், எந்த உண்மையை உணர்த்த ஏற்பட்டது? நாம் சாயைகள் தானா? எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?—என்பன போன்ற பிரச்னைகளை என் மனம் எழுப்பியபோது, ஒருதரம் என் தேகம் முழுவதும் மயிர்க் கூச்செறிந்தது.”
சூழ்நிலையையும் பாத்திர மனநிலையையும் பொருத்திக் காட்டும் இடங்களில் அருமையான சொற்கோலங்கள் பிறந்திருக்கின்றன மௌனியின் நடையில்.
“வெகு காலமாக, ஜோதி கொண்டு ஜொலிப்பது போன்று நிசப்தத்தில் தனிமையாக ஒரு பெரிய சுடர் விளக்கு மட்டும் லிங்கத்தருகில் எரிந்து கொண்டிருக்கும். அது திடீரெனச் சிறிது மறைந்து பிறகு பழையபடியே அமைதியில் தெரிந்தது. யாரோ ஒரு பக்தன் கடவுளை வழிபட உள் சென்றான் போலும். நான் மெதுவாகப் போய்க் கொண்டிருந்தேன். உலகின் கடைசி மனிதன் கடவுள் வழிபாட்டை முடித்துக் கொண்டு அநந்தத்திலும் அவியாத ஒளியை உலகில் விட்டுச் சென்றது போலத் தோன்றியது அந்த மறைவும் தோற்றமும். தூண்டப்படாது அணைய விருந்த என எரிந்த ஒளி நிமிர்ந்து ஜொலிக்கத்தான் நேற்று இது நிகழ்ந்தது.”
சின்ன விஷயங்களைக் கூட நுட்பமாகச் சித்திரிக்கும் போக்கில் எழுத்து வளர்கிற போது, மௌனியின் எளிய நடை சிக்கல்கள் நிறைந்த நீள வாக்கியம் (காம்ப்ளெக்ஸ்