பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை 183 "ஆழமான இருண்ட சுரங்கத்தினின்றும் இரு மணிகள் மின்னுவது போல இரு சொட்டுக் கண்ணிர் அவள் கண்களினின்றும் உதிர்ந்தது." "தூக்கத்தில் கண்ட இன்பக் கனவுகளைத் திரும்பக் காண ஞாபகம் கொள்ளுவது போன்றவையே அவன் மறதியும் ஞாபகமும்.: - சில சந்தர்ப்பங்களில், வியக்கத்தக்க வகையில் மெளனி உவமைகளை எடுத்தாண்டிருக்கிரு.ர். இரண்டு பேர் சேர்ந்து சங்கீதக் கச்சேரி செய்கிரு.ர்கள். ஒரு பெண் சாக மாலிகை பாடுகிருள். அவன் நண்பன் பிடில் வாசித்தான், மிக அழுத்தமாக லயித்துச் சேர்ந்தே வாசித்து வந்தான். இதை மெளனி தனித் தன்மையோடு குறிப்பிடுகிருர் இப்படி “இரவின் இருள் வெளியில் பயந்த இரு குழந்தைகளின் மெளனமான பிணைப்புப் போல் இருந்தது அந்தச் சேர்ந்த வாசிப்பு.’ . ஒருத்தியின் பார்வையை மெளனி இந்த விதமாக எடுத்துக் காட்டுகிரு.ர். “ஒருவன், தன் உள்ளுற உறைந்த ரகசியத்தை பைத்தியத்தின் பகற்களுவில் பாதி சொல்லி விட்டு மறைவது போல, அவள் பார்வை என்னை விட்டு அகன்றது.” பார்வையும் விழிகளும் மெளணியின் உரை நடையில் எவ்வெவ்வாறெல்லாமோ இடம் பெற்றுள்ளன. "அவள் கண்களில் பணிப்படலம் போன்று நிச்சயமற்ற நினேவுகளின் ஞாபகம் மிதந்தது.”