பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. வளரும் வசன நடை 'பல நண்பர்கள் அடிக்கடி கேட்கிருர்கள்: தமிழில் வசனம் உன்.ா என்று தமிழில் பாஷை தோன்றிய நாளிலிருந்தே வசனம் உண்டென்று சொல்ல வேண்டும். தமிழில் மாத்திரம் அல்ல, பேசப்படுகிற எந்த பாஷை யிலுமே வசனம் என்பது எப்போதும் உள்ளது. பாஷை எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. பாஷை என்ருல் மக்கள் உள்ளத்தில் நிகழ்வதை வெளிப்படுத்து வதுதான். கோபமோ, ஆத்திரமோ, சோகமோ, கருணையோ, மனசில் உண்டானுல் அதை அப்படியே வாய் திறந்து மனிதன் சொல்லால் சொல்லி விடுகிருண். அவ்வாறு சொல்லுவதே வசனம்." தமிழ் வசனம் குறித்து இவ்வாறு கூறுகிருர் ரசிகமணி டி. கே. சிதம்பரநாத முதலியார். 1937ல் வெளிவந்த ஆசிரியர் கல்கி'யின் கணையாழியின் கனவு கதைத் தொகுதிக்கு எழுதிய முன்னுரையில் அவர் மேலும் சில கருத்துக்களை அழுத்தமாக அறிவித்துள்ளார் 'தமிழ் மக்கள் தங்கள் உள்ளக் கிடைகளை ஆயிரக்கணக் கான வருஷங்களாக வெளியிட்டிருக்கிருர்கள். எத்தனையோ விதத்தில் வெளியிட்டிருக்கிரு.ர்கள். அப்படி வெளியிடுவதி லெல்லாம், ஒரு தொடர்பு ஒரு முறை நாளடைவில் ஏற்பட்டுத் தமிழ் வழக்கு என்றும் ஒன்று உண்டாகியிருக்