பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. பிச்சமூர்த்தி பிச்சமூர்த்தி முதிர்ந்த கலைஞர்; நல்ல கவிஞர். அழகு களைத் தேடும் கண்களும், இயற்கை இனிமைகளை ரசித்துக் களிக்கும் உன்னமும் பெற்றவர். மனிதநேயம் கொண்டவர். வாழ்க்கையை பிரியத்தோடு நேசித்தவர். அவருடைய இவ் இயல்புகள் அனைத்தும் அவரது உரை நடையிலும் பிரதிபலிக்கின்றன. அவர் ரசித்த இனிமை களே, வியந்த அழகுகளைக் கலைநயத்தோடு சொற்களிலே சித்திரித்தார் ந. பி. பிச்சமூர்த்தியின் சிறந்த கதைகளில் ஒன்ருன பதினெட்டாம் பெருக்கு ஆரம்பம் இது: "இக்கரையில் படிக்கட்டுகளே தெரியவில்லை. அக் கரையில் நாணல்களின் வளைந்த துணிகளெல்லாம் ஆற்று நீரில் விழுந்து விழுந்து எழுந்துகொண்டிருந்தன. கரை புரண்டு போகும் பெருக்கில் நொங்கும் நுரையும், சீமைப் பிலா இலைகளும், காய்ந்த மலர் மாலேகளும் மிதந்து சென்றன. காவிரியின் பதினெட்டாம் பெருக்கு. தமிழ் மக்கள் கவியுள்ளம் படைத்தவர்கள் என்பதில் சந்தேகமில்லை. இல்லாவிட்டால் காவிரியை சூல் கொண்ட பெண்ணென்று யாருக்குச் சொல்லத் தெரியும்? காவிரிப் பெருக்கு மோட்டிலும் முடைசலிலும் படுகையிலும் மோட்டிலும் பாய்ந்து மண்ணைக் கனகமாக்கி மகிழ்ச்சி விளைவிக்க வில்லையா? ஆற்றுப் பெருக்கின் அசைவு சூல் கொண்ட பெண்ணைப் போல்