பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# is பாரதிக்குப் பின் தெருக் கோடி வீட்டு மாடியிலிருந்து வடக்கே பார்த் தால் இந்த ஆனந்தமயமான காட்சி தென்படும், கிழக்கே பார்த்தால் ஆற்றங்கரைக்கு வந்து சேரும் ரஸ்தா, பாம்பின் தாக்கைப் போல நீண்டு தென்புறத்தில் மறைவது தெரியும். ஆற்றுப் பெருக்கைப் போலவே இத்தெரு எப்பொழுதும் நிறைந்திருக்கும்.” தெளிவும் எளிமையும் நிறைந்த ந. பி.யின் உரைநடை யில் ஒரு சிந்தனையாளனின் தர்க்கிப்பும், கவியின் வர்ணிப்பும் கூடி நயம் சேர்ப்பதை அவருடைய கதைகள் நெடுகிலும் காண முடியும். ஒரு உதாரணம்:

  • சொல்லப்போகுல், சாதாரண மனிதனுக்கு தனிமை அபாயகரமானது-உடல், உள்ளம் எல்லாவற்றிற்கும் கடி வாளமும் வண்டியோட்டியும் இல்லாத குதிரை டாக்கார்ட்டை இழுத்துப் போவதென்ருல் எப்படி இருக்கும்? நாலு பேர் நடுவிலிருந்தால்தான் சாதாரண மனிதன் நேரும் கூருமாய் இருப்பான். தனிமையில் மனது சலிப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? ஒரு நொடி பச்சைக் குதிரை தாண்டி அண்ட சராசரங்களுக்கு அப்பால் போய் நிற்கும்; மறு நொடியில், பாய்ச்சிய நங்கூரம் போல மனக் கடலின் அடிமட்டத்தில் போய் நிலைகொள்ளும், ஒரு தரம் தன்னலமற்ற தாயவெளியில் நடைபோட்டுப் பழகும், மறு தரம், விலங்கினப் போக்கிலே, வாலை கொண்டை மீது போட்டு நாலு கால் பாய்ச்சவில் போகும் காளை போல் கட்டற்று ஓடும். பிரானசக்தி நிலைகொள்ளாது பாதரசம் போல் சிதறித் தொல்லை கொடுக்கும். தனிமையைக் கையாளத் தெரிந்தவன் யோகி, ஞானி."

ஒரு கவிஉள்ளம் வசனத்தில் கதை சொல்கிறது என்பதை பிச்சமூர்த்தியின் உரைநடை அவ்வப்போது உணர்த்திக்கொண்டே செல்கிறது. "வானம்பாடி கதை