பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை Hi} யில் ஒரு வானம்பாடியின் பாடலே அவர் வர்ணிக்கும் நயம் ரசனைக்கு உரியது

  • ஒரு கணம் ஆற்றங்கரை யோரத்தில், நகrத்திரமும் நள்ளிரவும் சூழ்ந்த நேரத்தில், ஆகாயத்தை முத்தமிடும் மணிக்கூண்டினின்று சிதாருடன் இரண்டறக் கலந்து உருகும் கோஷா ஸ்திரீயின் கனித்த குரல் காதல் தீ மூளப் பாடுவது போல இஸ்ராபேலின் இன்னிசை எழுந்தது. மறுகணம் அம்மணிக் கூண்டினடியில், .ெ ப ன் னி ன் குரலோசை கொண்டு கற்பனைத் துாரியத்தால் பெண்ணையே ஊகித்து உருவாக்கும் பித்தர்களின் கட்சிப் பிரதி கட்சி ஒலித்தது. ஒரு கணம் வெண்ணிலவில் பாசி சேர்ந்து பாழடைந்த பழம் மண்டபங்களின்று கிளம்பும் நரிகளின் ஊளே போன்று, ஆசை மண்ணுன கதை பாட்டில் மிதந்தது: மறுகணம், கண்கள் தீப்பறக்க, கத்தியும் கேடயமும் மோத, குளிர் நிலாக் கதிர் கத்தியின் மீது விழுந்து துண்டாக, காதலிக்காக போர்புரியும் வீரர்களின் முழக்கம் பொங் கிற்று.

இஸ்ராபேல்! என்று குறுக்கிட்டான் பக்கிரி. ஒரு நிமிஷம் நிசப்தம். மறு நிமிஷம் இசைச் சித்திரம் மாறி விட்டது. கருக்கலின் கனக ஒளியில், மோனக் கடல் மீது இன்னிசைத் தோணி ஒன்று மனிதரை நோக்கி மிதந்து வந்து, மக்கி மண்ணுகும் யாத்ரீகனைத் தட்டில் ஏற்றி அமரளுக்கும் பரிவும் போதமும் பூர்ணமாய் தொனித்தது இஸ்ராபேல் என் குருவே! என்ருன் பக்கிரி. இன்னிசை யின் தெய்வ உலகு மறைந்து விட்டது." - கதைகளின் நடுவே, "இச்சையின் காட்டில் அலையும் வேங்கையைக் கண்டான். சேற்றில் புதைந்து இன்புறும் மீனைக்கண்டான்," என்பது போல் க த பா த் தி ர மனநிலையைக் குறிப் பிடும் போதும்,