பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

##2 பாரதிக்குப் பின் દ્ર સ્વઃ "வழக்கம் போல் சூரியனுதித்தான். பாயும் ஜலத்தைப் பளிங்கு :ோல் செய்தான். பறக்கும் மேகங்களே பஞ்க போலாக்கினன்' என்பது போல் வர்ணனை பண்ணுகித போதும், பிச்சமூர்த்தியின் வசனத்தில் கவிதையின் சாயல் அம் தொணியையும் உணர முடிகிறது. பாத்திர விவரிப்பு என்று ந, பி. அதிகமான வர்ணனை யில் ஈடுபடுவதில்லை. அபூர்வமாகச் சித்திரிக்கிறபோது ஒரு சில வரிகளில் அவரது படப்பிடிப்பு அழகிய உரைநடை பாக அமைகிறது. உதாரணத்துக்கு இரண்டு சித்திரங்களைக் காணலாம்'ஓர் இளம் பெண். மாநிறம், அராபிக் குதிரை போன்ற மேனியும் மினுக்கும், வளர்ச்சியும், பார்வைக்கு ராணி போன்ற அழகும் கம்பீரமும் பெற்றிருந்தும், அவளுடைய ஆ.ை ஏழ்மையைப் பறையடித்தது.’ (பதினெட்டாம் பெருக்கு; "அவர் எனக்கு ஒரு பைராகிணியை அறிமுகம் செய்து வைத்தார். அவளுக்கு இருபது வயதுக்கு மேலிருக்காது. கடைத்தெடுத்தது போன்ற உடல். கார்த்திகை மாதத்து ஆற்றுப் பெருக்கில் மிதக்கும் விளக்கைப் போல் சுடர் விட்டெறியும் கண்கள். அவள் முழுத் தோற்றத்திலே ஒரு தனி சோபையும் அ ைகூதியமும் வழிந்து கொண்டிருந்தது.” (விழிப்பு). பிச்சமூர்த்தியின் உரைநடையில் கவிதையின் சாயல் மேலோங்கி நிற்பதுடன், உவமை நயமும் ஒரு தனித் தன்மையோடு விளங்குகிறது. 'நrத்திரங்கள் பதிந்த வானம் முஸ்லிம் ராணியின் ஜரிகை உடையைப் போல் மின்னிற்று" ஆற்று நீரில் நீந்திச் செல்பவர்களின் அவிழ்ந்த தலைமயிரைப் போல் நிலவு வெள்ளத்தில் மரங்களின் கிளைகள் மிதந்து கொண் டிருந்தன’-இவை போன்ற கற்பனைகளைவிட, பொருந்தா