பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை 115 வேண்டும். அதோடு நில்லாமல் விழிப்புடனும் இருக்க வேண்டும்-மயில் ஜாமத்தில் கூவுவதைப் போல." நெருப்புக் கோழி என்ற தலைப்பில் ஒரு மனநிழல் நினைத்தால் வியப்பாய் தோன்றும் ஒரு சுபாவம் பற்றி ஆரம்பிக்கிறது. ஏதேனும் கஷ்டம் நேரும் பொழுது நம்மால் தாங்க முடிவதில்லை. ஆனல், அதைப் பற்றிப் பிறகு நினைக்கும் பொழுது ஒரு இனிமை தென்படுகிறது. இந்த நினைப்பு, பால்ய கால நிகழ்ச்சி ஒன்றைக் குறித்து எண்ண வைக்கிறது. அந்த நிகழ்ச்சியையும் அது பற்றிய சிந்தனையையும் தொடர்கிறது இன்னெரு சம்பவம். பிள்ளைகள் கூடி, பள்ளிக்கூடம் விளையாட்டு விளையாடுவது பற்றியது. பாடம் சொல்லுவது, தண்டனை தருவது எல்லாம் வருகின்றன. இனி கட்டுரையிலிருந்து. "வாத்தியார் அடித்துவிட்டார் என்று பள்ளிக்கூடம் போன உடனே திரும்பும் குழந்தைசளும், வாத்தியார் அடிப்பார் என்று பள்ளிக்கூடம் போக முரண்டு செய்யும். குழந்தைகளும் சேர்ந்து இந்த மாலைப் பள்ளிக்கூடத்தை தடத்துவது வியப்பல்லவா? எந்த அடியைப் பள்ளிக்கூடத் தில் வாங்க இஷ்டப்படவில்லையோ, அந்த அடியை இங்கே வாங்குவதில் அவர்கள் இன்பம் காண்கிருர்கள்! எந்தக் கட்டுப்பாடு பள்ளிக்கூடத்தில் வேம்பாக இருக்கிறதோ, அதற்கு இங்கே அளவு கடந்த மதிப்பு! - இவை எல்லாவற்றையும்விடச் சிறந்த துறை ஒன்றிருகி கிறது. நாடகங்களைப் பற்றி நினைத்துப் பாருங்கள். வாழ்க்கையில் காணும் வெற்றி தோல்விகளையும் நிகழ்ச்சி களையும் நடத்திக் காட்டுவதுதானே நாடகம்? வாழ்க் கையில் தாங்க முடியாத நிகழ்ச்சிகளை நாடகத்தில் காணும் பொழுது சொல்ல முடியாத இன்பம் ஒன்று மனத்தில் பிறக்கிறதே, அது ஏன்? இவைகளே எல்லாம் நிணக்கும்பொழுது ஒரு இயற்கை நிகழ்ச்சி ஞாபகத்திற்கு வருகிறது. சூரியன் தினம் நம்மைப்