பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15, ஸி. என். அண்ணுதுரை தேசிய உணர்வு எழுச்சியும், நாட்டின் விடுதலை இயக்க வேகமும் மொழிகளில் ஒரு மறுமலர்ச்சி புகுத்தியது வரலாற்று உண்மையாகும். அதே காலத்தில், இன உணர் வும்-மொழி அடிப்படையிலும் இன ரீதியிலும் தனி நாடு அமைக்கவேண்டும் என்று ஒரு சாராரிடையே எழுந்த உணர்வும்-மொழியின் மலர்ச்சிக்கு வகை செய்தது. இதுவும் வரலாறு காட்டும் ஒரு உண்மைதான். பெரியார் ஈ. வே. ராமசாமி திராவிட இன உணர்வைத் துாண்டி, தமிழர்-தமிழ்-தமிழ்நாடு தமிழ்மொழி உயர்வு என்ற உணர்ச்சிகள் பெருகுவதற்கு வகை செய்தார். அவரைப் பின்பற்றியவர்கள் பலர் மொழிப்பற்றுடன் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் தம்மால் இயன்றதைச் செய்ய முற்பட்டார்கள். அவர்களில் முக்கிய மானவர் ஸி. என். அண்ணுதுரை ஆவார். பெரியார் விதைத்த இயக்கம் நன்கு வளரவும், வேக மாகப் பரவவும், இளைஞர்களைக் கவர்வதற்கும் அண்ணுதுரை யின் பேச்சாற்றலும் எழுத்து வேகமும் முக்கியக் காரணங் களாக அமைந்தன. 'உலகிலே பலபல தீவிரவாதிகள் தோன்றியது பற்றிய வரலாறுகள் எனக்குத் தெரியும். நாத்திகம் பேசிய தாவலரையும் நானறிவேன். நெருப்பாறு தாண்டும் வீரகும்