பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 பாரதிக்குப் பின் கிறது. இந்தத் தமிழ் வழக்கு என்பது தமிழ் மக்கள் நாவிலேயே இருக்கிறது. உண்மையில், தமிழ் பாஷையே ஆடவர், பெண்டிர், பிள்ளைகளான தமிழ்மக்கள் நாவிலே கிடப்பதுதான்." "தமிழில் எத்தனை எத்தனையோ வார்த்தைகள் வழக்கிழந்து போயிருக்கின்றன. இலக்கண முடிவுகளும் அப்படியே வழக்கிழந்து போயிருக்கின்றன. புதிதான வார்ததைகளும் முடிவுகளும் நெடுகிலும் பாஷைக்குள் வந்து புகுந்து தங்கி நிற்கின்றன...இருந்தாலும், மாறுபாடுகளுக்கு ஊடெல்லாம் தமிழ்ப் பண்பு என்று தனித்த பண் பொன்று தொடர்ந்து வந்திருக்கிறது. இந்தப் பண்பு, வழக்கில் உள்ள சொற்களிலெல்லாம்,இதர பாஷைகளிலிருந்து வந்த திசைச் சொற்களில் எல்லாம்கூட ஊறி நின்று தமிழர் செவிக்குச் சுவை தந்திருக்கிறது. தமிழ்ப் பண்போடு கூடி.க: சொல்லுக்கே-பேச்சாலுைம் சரி. எழுத்தானலும் சரிஇனிமையோ வேகமோ ஏற்படக் கூடும்.’ ‘புலவர் குழாம் ஒத்துப் பேசித் தமிழை விண்ணுக்கே றிவிடப் பார்த்தாலும், அரசியலிலும் ஆதார இயலிலும் திருத்தம் உண்டாவதற்கான கிளர்ச்சியில் ஆத்திரம் கொண்ட சில பத்திராசிரியர்கள் ஜனங்கள் பாஷையிலேயே நேர்முகமாக எழுதி வந்தார்கள். தங்கள் ஆத்திரத்தையும் கொதிப்பையும் அத்தகைய நேரான தமிழ் மூலமாக வெளியிட்டு ஜனங்கள் மனசைக் கவர ஆரம்பித்தார்கள் ஜனங்களுக்கும் பத்திரிகை படிக்க வேண்டும் என்ற அவர் உண்டாகிவிட்டது. ஆங்கிலம் கற்றவர்களும் தமிழ்ப் பத்திரிகைகளைப் படித்து அனுபவிக்க ஆரம்பித்து விட்டார்கள். இவர்கள் எழுதிவந்த தமிழ் எவ்வளவோ அமைப்போடுதா னிருந்த தென்ருலும், வாசிப்பவர்கள் வாசித்து முடித்ததும் அடுத்து வரும் பத்திரிகை எங்கே 意