124
பாரதிக்குப் பின்
உயர்ந்த எண்ணத்தையும், தூய்மையையும், தோகையரின் மேன்மையையும் உணர்த்துமா, வாம மேகலை இறவளர்ந்த அல்குலை உடையவள் பிராட்டி என்று கூறிய கம்பரின் கவிதை முறை, இத்ததைய உயரிய எண்ணத்தைக் கிளப்புமா என்று கேட்கிறேன். புளித்த காடி தாகவிடாய் தீர்க்குமா, இளநீர் போக்குமா என்று கேட்கிறேன். புண்ணிலிருந்து (வடிவது) நாற்றமடிக்கும், பூவிலிருந்து மணம் வீசும்! புலமை என்றால், புனிதமான எண்ணத்தைப் பக்குவமாகப் புகுத்த வேண்டுமேயொழிய, மேலிட மறைவிட வர்ணனைக்குக் கருவியாக இருக்க வேண்டுமா என்றுதான் நான் கேட்கிறேன்.” (கம்பரசம்)
அரசியல் உண்மைகளை அழுத்தமாகக் கூறுகிறபோது, சாதாரண மக்களும் இலகுவில் விளங்கிக் கொள்ளக்கூடிய விதத்தில் சர்வ சாதாரண விஷயங்களை உதாரணங்களாக அடுக்கி, உரிய கருத்தை நன்கு பதிய வைக்கும் திறன் அண்ணாதுரையின் உரைநடையில் கலந்து மிளிர்கிறது. இதோ ஒரு பகுதி—
“மோட்டார் நன்றாக ஓட, அதை ஓட்ட விசை இருந்தால் மாத்திரம் போதாது—அது தவறான வழியில் சென்றால் தடுக்க ‘பிரேக்’கும் வேண்டும்! நாடு செழிக்க நல்ல ஆறு இருந்தால் மாத்திரம் போதாது—அதிலிருந்து வெள்ளம் புரண்டு ஊரை அழித்து விடாமல் இருக்கக் கரைவேண்டும்? நல்ல காளையை ஓட்ட சிறு சவுக்கு இருந்தால் மாத்திரம் போதாது—அதைக் கிழக்கேயும் மேற்கேயும் திருப்ப மூக்கணாங் கயிறும் வேண்டும்! வீட்டிற்கு வாயிற்படி இருந்தால் மாத்திரம் போதாது—வாயிற்படிக்குக் கதவு வேண்டும். கதவுக்குத் தாழ்ப்பாளும் வேண்டும்! அது போலவே, ஜனநாயக காலத்தில், குடியரசு வந்த பிறகு, நாட்டில் நல்லாட்சி நடக்க வேண்டுமானால், ஆளும் கட்சி ஒன்று இருந்தால் மாத்திரம் போதாது—மாற்றுக் கட்சியும்