இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
126
‘பாட்டியம்மா ‘பாட்டி’ ஆகி, பிறகு ‘கிழவி’யாகி, பிறகு ‘ஏ! யாரது?’ ஆகி, பிறகு ‘போ! போ!’ என்றாகி பிறகு ‘இதேதடா தொல்லை’ என்றாகி, ‘பெரிய சனியன்’ என்றாகி ‘பிசின், இலேசில் விடாது’ என்றாகி, இப்போது கவனிப்பார், கவலைப்படுவாரற்ற ஓர் உருவமாகிவிட்ட நிலை!’ —இது போன்ற நயமான வர்ணிப்பு அபூர்வமாகச் சில இடங்களில் காணக் கிடைக்கும். மற்றப்படி சுத்த வளவளா!
அண்ணாதுரையின் பேச்சு, அவரைப் போலவே நாமும் பேசவேண்டும் என்ற ஆசையை அவருடைய ‘தம்பிகள்’ பலருக்கு ஏற்படுத்தியது போலவே, அவருடைய எழுத்து அண்ணாதுரையைப் போல நாமும் எழுதவேண்டும் என்ற எழுச்சியைப் பல இளைஞர்களிடையே உண்டாக்கியது. ஆனால், அண்ணாதுரையின் படிப்பும் பயிற்சியும், அறிவும் ஆற்றலும், சிந்தனையும் உள்ளத்தின் ஒளியும் அவர்களில் எவரிடமும் இல்லாததால், உரைநடையில் அண்ணாதுரை பெற்ற வெற்றியை மற்றவர்கள் பெறஇயலாமல்போயிற்று.