பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை 1չ என்று நாடுகிற பாவனையிலேயே இருந்தார்கள். எழுதினவர் களும், வாசிப்பவர்களின் நோக்கத்தையும் அவசரத்தையுமே கருதி எழுதினர்கள் என்றே சொல்ல வேண்டும். இலக்கிய மாய்த் தமிழுலகில் நின்று உலவ வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆளுலும் தமிழுக்கு உயிருண்டு, சக்தியுண்டு என்பதை அந்தப் பத்திராசிரியர்கள் வாசகர்களின் ஆர்வத்தின் மூலமாகவே வெளிப்படையாக ரூபித்துக் காட்டி விட்டார்கள். புலவர்கள் இதை எல்லாம் ஒப்புக் கொள்ளுவார்களா!" (டி. கே. சி.) பழமையைப் போற்றுகிற பண்டிதர்கள்-புலவர்கள் மட்டுமே பத்திரிகைகளில் வெளிவந்த முயற்சிகளை ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்பதில்லை. இலக்கணத்தையும் மரபையும் வலியுறுத்த விரும்புகிற புதிய பண்டிதர்களும் எழுத்தாளர்களின் புதுமுயற்சிகளையும் சோதனைகளையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் தான். இதற்கு ஒரு உதாரணமாக அமைந்தது இன்றைய தமிழ் வசனநடை என்ற புத்தகம். மு. அருளுசலம் எழுதியது. 1945ல் வெளிவந்த இந்தப் புத்தகம் அந்நாட் களில், குறுகிய காலத்தில், மிகுந்த பரபரப்பை ஏற் படுத்தியது. 'தமிழ்ப் பண்டிதர்களுக்கும் மறுமலர்ச்சி எழுத்தாளர்களுக்கும் சமர்ப்பணம் செய்யப்பட்ட அந்த நூல் எல்லோரது கண்டனத்தையும் எதிர்ப்பையும் கடுமை யான தாக்குதல்களையும் வசைபாடல்களையும் எதிர்கொள்ள நேரிட்டது. பத்திரிகைகள் பலவும் அதைக் குறை கூறின. முக்கியமாகக் குறிப்பிடத் தகுந்த ஒரு விசேஷம். இந்தப் புத்தகத்தின் பதிப்பாசிரியரே இதைக் குறைகூறிக் கடுமை யாக விமர்சித்து எட்டுப் பக்கப் பதிப்புரை எழுதியிருந் தார். (இது தினமணி வெளியீடு. அப்போதைய அதன் பதிப்பாசிரியர்: பி. நீ)