உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

போல ‘உன் பாஷைக்குத் தலைவணங்குகிறேன்’ என்று உள்ளம் குறிப்பிடும்.

லா. ச. ராமாமிருதத்தின் எழுத்தாற்றல் ஆச்சரியகரமானது. கதை சொல்லும் முறையில் அவர் சோதனைகளும் சாதனைகளும் செய்திருப்பது போலவே, அவற்றை எழுதும் உரைநடையிலும் அவர் சோதனைகளும் சாதனைகளும் மிகுதியாகப் புரிந்திருக்கிறார். அவருடைய உரைநடையின் வீச்சையும் வளத்தையும், ஆழத்தையும் அழுத்தத்தையும், அவருடைய சிறுகதைகளைப் போலவே, ‘புத்ர’, ‘அபிதா’ ஆகிய நாவல்களும் எடுத்துக் காட்டுகின்றன.