146
பாரதிக்குப் பின்
“பின்கட்டிலிருந்து அவள் வெளிப்பட்டாள். நெற்றியும் கன்னங்களும் சந்தன வெண்மையில் பளீரிட்டன, காதோரங்களில் மயிர்ச் சுருள்கள். ஈரத்தில் கன்னங்களோடு ஒட்டிக்கொண்டிருந்தன. வெள்ளை விழிமேட்டில் செந்நரம்புக் கொடிகளின் நடுவில் சாறு ஓடும் கருவிழிகள் உட்கார்ந்திருந்தன.
அவள் அவர்கள் பக்கம் கண்ணெடுத்துக்கூடப் பார்க்கவில்லை. கூடத்துக்கும் சமையலறைக்கும் காரியமாய் விடுவிடென அலைந்தான். கால் மெட்டிகள் கோபத்துடன் ‘ணக் ணக்’ என்றன.
அவன் கண்கள் அவள் தோள் வளைவுகளையும் இடுப்பிலிருந்து அகன்று வளைந்த உருவக் கோடுகளுள் வேகமாய்க் குழையும் அங்க அசைவுகளையும் விழுங்கின. அவனில் ஒரு பாதி பிரிந்து அவளோடு இணைந்தது. ஊஞ்சலில் உட்கார்ந்திருந்த குறை நிலை அவளையும் ஆவலோடு இணைந்த மறுபாதியையும் கவனித்துத் தவித்தது.
சுவாமி விளக்கை ஏற்றுகிறாள். குச்சியிலிருந்து சுடர் சீறிக் குதித்து விளக்குத் திரிக்குத் தாவுகிறது. விளக்கெதிரில் விழுந்து அவள் சேவிக்கையில் அவளைக் கவ்வினாற் போலேயே அவன் நிழலும் அவள் உருவக்கோட்டுடன் குனிகிறது.
பெரு விளக்கில் அகல் விளக்கை ஏற்றிக் கொண்டு அவன் பக்கமாய் முற்றத்தை நோக்கி வருகிறாள். ஊஞ்சல் சங்கிலியை உராய்ந்து அவள் கன்னத்தைத் தொட அவன் கைகள் துடித்தன. சுடரை அணைத்த விரல் சந்துகனில் குங்குமச்சாறு போல் ஒளி வழிகின்றது.
அவள் எங்கோ வெகு தூரத்தின் விளிம்போரத்தில் பாடுகிறாள். துளசி மாடத்தில் விளக்கை வைத்துவிட்டு