பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை #43 தத்தால் ஸ்வர ஜாதிகள் புதுவிதமாய்க் கூடி ஒரு அபூர்வ ராகம் ஜனிப்பது போல், அவள் என் வாழ்க்கையில் முன்னும் பின்னுமிலாது முளைத்தாள்.”-லா, ச, ரா. {அபூர்வராகம்). - 'விரல்களின்றியும் வீணையில் சங்கீதம் வியாபகம் கொள் ளும் போலும்! சுருதி, விலகி எட்டியா நின்று இடைவிடாது முணுமுணுக்கிறது! சப்தத்தினின்றும் சங்கீதம் விடுதலே பெத்து எட்டிய வெளியில் மெளனமான வியாபகம் கொன் கிறது. சுவர்க்கோழிகள் இடைவிடாது புலம்புகின்றன. அவன் மனவெளி இருளில் ஒன்றி நின்ற ஒன்று அந்தப் பக்கம் சுட்டிக்காட்ட, மனம் அச்சம் கொள்கிறது. மெளன மாக இருந்து அந்த அறையில் நிலைத்து நிற்பது, தன்னை மறந்த பிறிதொன் து புறவெளியில் சஞ்சரிப்பதான எண்ணத்தைக் கொடுத்தது. அவன் ஆப்போது அவள் எண்ணத்தில் லயித்திருந்தான்.'-மெனனி, (மனக்கோலம்), போலும் போலும். என்று யூகங்களை அடுக்குவதி லும், வாக்கியங்களே முடிப்பதிலும் மெளனி தனி ஈடுபாடு கொண்டிருக்கிருர். அவருடைய ஒவ்வொரு கதையிலும் இதைக் கண்டு உணரலாம்: ஆழித் தண்ணீரில் எல்லே பிரித்துக் கோடிட்டது தாகு நம் வாழ்க்கை அசைந்து அசைந்து மிதக்கும் தோணி, (மனம்) எல்லே கடக்க அறியாது கடந்தது போலும்; கனவின் கரையைத் தாண்டி, அவன் பாடிக் கொண்டிருப்பதைத் தான் நான் கேட்டுக் கொண்டிருந் தேன் போலும். நான் கனவு கண்டு கொண்டிருந்தேன் என்ருல், என்போது நான் விழிப்படைந்தேன்?” (எங்கி ருந்தோ வந்தான்) தீவிர உணர்ச்சி அனுபவத்தை இருவரும் விவரிக்கிற பாணி சுவாரஸ்யமாக இருக்கிறது,