பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 பாரதிக்குப் பின் காது; அதன் பாஷையும் அப்படியே. பேச்சின் பல்வேறு தகாசுகளிலும், நாகரிகத்தின் வெளிப்பூச்சுகளுக்கு மடியில் கொச்சையை அமுக்கி அழிக்க முயன்ருலும் அது அழியாது. நம் உண்மையான தன்மை நம்மிலிருந்து நம்மை மீறி வெளிப்படும் சமயத்தில், அந்தத் தன்மையின் பாஷையில் கொச்சை அலறிவிடும். ஏனெனில், வலி, துயரங்களின் முதல் வீறல் கொச்சை, பயத்தின் முதல் குழறல் கொச்சை. கோபத்தின் குமுறல் கொச்சை. குழந்தையின் மழலையில் இழைவது கொச்சை. முத்தத்தின் எச்சியில் நூற்பது கொச்சை, ஆலிங்கனத்தில் உடல்களின் குழைவிலிருந்து இழைவது கொச்சை உருக் கத்தில் நெஞ்சின் முதல் உடைப்பு கொச்சை. வாழ்க்கை யின் மைல் கற்களைக் கடந்த கிழத்தின் பொக்கை வாயி லிருந்து உதிரும் அனுபவத்தின் வாக்கு கொச்சை. இரத்த வேகத்தின் கிடுகிடுப்பு கொச்சை. ஒசையிலிருந்து பிசைந்த முதல் உரு கொச்சை. வாழ்க்கையிலும் அதன் ஆதாரமான தன்மைகளிலும் கொச்சையின் இடம் மேற்கூறியவாறு அசைக்க முடியாதபடி இருக்கையில், இலக்கியத்தில் மாத்திரம் கொச்சையின் இடத்தை மறுத்து விட முடியுமா? அப்படி மறுத்த இலக்கியம் வாழ்க்கையின் பண்புக்கு உண்மையான சாட்சியாகிவிட முடியாது. கொச்சை பாஷை இலக்கியத்தின் பண்பையோ, அந்தஸ்தையோ குறைத்து விடுகிறது என்று நாம் நினைத்துக் கொண்டால் அது உண்மைக்கு ஒட்டியது அல்ல. இன்னும் பார்க்கப் போளுல், இலக்கியப் பண்பை கொச்சை மிகையே படுத்துகின்றது. அர்த்த புஷ்டியுடன் ஒசையின்பு மும் வேகமும் கொச்சைக்குப் பெரும் பங்கில் உண்டு. சில சமயங்களின் அழகையோ, செயல்களின் வீரத் தையோ, நிமிஷத்தின் அந்நியோன்யத்தையோ, மெளனங் களின் அகண்டத்தையோ, நெஞ்சில் மின்வெட்டில் பாய்ந்து