பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#4 பாரதிக்குப் பின் மறுமலர்ச்சி எழுத்தாளர்களின் பலவித நடைகளையும் "காப்தல் உவத்தல் அகற்றிச் சீர்தூக்கிப் பார்க்கும் ஒரு நல்ல விமர்சன நூல் வெளிவர இந்நூலும் ஒரு தூண்டு கோலாயிருக்கும் என்பது எனது நம்பிக்கை” என்று பி. ரீ. இன்றைய தமிழ் வசன நடை"யின் பதிப்புரை முடிவில் கூறியிருப்பினும், 1943இலோ, அதற்குப் பின்னரோ அத்தகைய நல்ல முயற்சி எதுவும் தமிழில் செய்யப்பட்ட தேயில்லை. இது பெரும் குறைதான். அந்தக் குறையைப் போக்குவதற்காகத் தான் நான் இப்போது பேளு எடுத்திருக்கிறேன் என்று சொல்ல வரவில்.ே அதற்குப் போதுமான தகுதி எனக்கு இல்லை என்பதை நான் அறிவேன். தமிழில்-மொழியிலும் இலக்கியத்திலும்-நீடித்து வருகிற பல குறைபாடுகளையும் பற்றி நான் அடிக்கடி சிந்திப்பது உண்டு. தமிழ் உரைநடை வரலாறு எழுதப்படாததும் ஒரு குறையே ஆகும். தமிழில் வெகுகாலம் வரை உரைநடையே இருந்த தில்லை; அச்சு யந்திரம் இந்நாட்டுக்கு வந்த பிறகு தான்16-ம் நூற்ருண்டின் இறுதியில்-தமிழ் மொழியில் வசனம் தோன்றி வளர்வதற்கான வாய்ப்பு உண்டாயிற்று. 19-ம் நூற்முண்டில் சிலர் நல்ல வசன நடையை வளர்த்து வந்தார்கள். சமீப காலத்தில்தான் வசன வளம் பெருகத் தொடங்கியுள்ளது. இவை எல்லாம் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளவை. - தொல்காப்பியத்தில் உரைநடை பற்றிய குறிப்பு காணப்படுகிறது. தமிழில் எல்லாம் செய்யுள்களாகவே இயற்றப்பட்டிருந்த போதிலும், உரையாசிரியர்கள் அநேகர்