160
பாரதிக்குப் பின்
‘ஸடாண்டர்ட் நடை’ எதையும் கையாளவில்லை. அந்த அந்த ஆசிரியர்களின் தனித்தன்மை நன்கு வெளிப்படும் விதத்தில் வித்தியாசமான ஆங்கில நடையில்தான் எழுதியிருக்கிறார்கள். ஆனால் தமிழில் மொழிபெயர்க்கிறவர்கள் எல்லாப் படைப்பாளிகளின் எழுத்துக்களையும் ஒரே மாதிரியான எளியநடையில் தான் பெயர்க்கிறார்கள். இது மூல ஆசிரியனது எழுத்து நடையின் சிறப்பை எடுத்துக் காட்டாது. ‘வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பது’ தான் படைப்பாளிக்கு நியாயம் செய்வது ஆகும் என்று சி. சு. செ. வலியுறுத்தினார்.
அவ்வாறே அவர் அநேக கதைகளை மொழி பெயர்த்து ‘எழுத்து’ பத்திரிகையில் வெளியிட்டார். ஹென்றி ஜேம்ஸின் ‘புரூக் ஸ்மித்’ கதையை மொழிபெயர்த்த செல்லப்பா முன்னுரையாக எழுதிய வரிகள் உரைநடை பற்றிய அவரது கருத்தை தெளிவாக எடுத்துச் சொல்கின்றன.
“ஹென்ரி ஜேம்ஸின் நடை கருத்தாழமான சிக்கலான, சுழற்சியான நடை, படிக்க முடியாதபடி செய்யும் அளவுக்கு கூடமானது என்று கூடக் கருதப்பட்டது. ஆனால் அதில் ஒரு இறுக்கம், திட்டம், நேர்த்தி இருக்கும். வாக்ய அமைதி புதுத் தோற்றங்களைப் பெற்றிருக்கும். சொற்கள் சேர்க்கை புது அர்த்தச் சாயல்களை ஏற்றி இருக்கும். அதை மொழி பெயர்ப்பது சற்று கடினமானதுதான்.
“மொழிபெயர்ப்பு சம்பந்தமாக ஒரு வார்த்தை. வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பது, கயஓட்டமாக மொழிபெயர்ப்பது என்ற இரண்டு விதங்களிலும் குறை, நிறை இருக்கிறது. இந்த மொழி பெயர்ப்பு முன் வழியில் செய்யப்பட்டிருக்கிறது. மூல ஆசிரியனது உரைநடைப் போக்கிலேயே தமிழுக்கும் ஒரு உரைநடையை இயைலிக்கும் ஒரு தோரணை கையாளப்பட்டிருக்கிறது. கருத்துக்களையும்