பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை #63 பட்டவர்களுக்கு செல்லப்பாவின் உரைநடை உறுத்தல் கோடுக்கிறது என்று பலர் அபிப்பிராயப்பட்டார்கன். உலக இலக்கியப் படைப்பாளிகளின் நடைநயத்தை தமிழ் நடையிலும் பிரதிபலித்துக் காட்ட வேண்டியது அவசியம் தான்; ஆளுல் செல்லப்பாவின் மொழிபெயர்ப்பு அவ்வாறு செய்யவில்லை; மூல ஆசிரியர்களின் படைப்பு நயங்களை நன்கு புரிந்து கொண்ட, தமிழ் வளத்தை நன்ருக உணர்ந்து தமிழ் மொழியை ஆற்றலுடன் கையாளத் தெரிந்த, திறமைசாவிகள் இந்தக் கதைகளை மொழி பெயர்க்க வேண்டும் என்றும் சிலர் கருத்து தெரிவித்தார்கள். ஆனலும் செல்லப்பா தனது முயற்சிகளையும் சோதனை களையும் கைவிட்டாரில்லை. தமிழ் வா சக ர் க ள் ஒரு சோதனைக்காரப் படைப்பாளிக்கு ஏற்ப தன்னை பொருந்தச் செய்து கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக் கிறது" என்றே அவர் எண்ணிஞர். இலக்கணத்தை அப்படியே பின்பற்றி எழுதுகிற முறை உரைநடை வளர்ச்சிக்குத் தடங்கலாகவே இருக்கிறது என்ற கருத்து, உரைநடை பற்றி சிந்தித்த எழுத்தாளர்களுக்கு அவ்வப்போது எழுத்தது உண்டு. முக்கியமாக புணரியல்’ விதிகளும் ஒற்து விவகாரமும், பேச்சு நடைக்கும் எழுத்து. நடைக்குமிடையே மிகுந்த மாறுபாடுகள் ஏற்படக் காரணமாக இருக்கின்றன என அவர்கள் உணர்ந்தார்கள். "கடல் தாவு படலம்’ என்பதை கடருவு படலம்" என்றும், முள் -தாள்-தாமரை” என்பதை முட்டாட்டா மரை” என்றும் தமிழ் கற்ருேர் முன்பு எழுதிக் கொண்டிருந் தார்கள். அதற்கு ஆதாரமாக இலக்கண விதிகளைச் சொல்லி மிரட்டி வந்தார்கள். பால், கடல் என்ற சொற்கள் சேர்ந்து வருகிற போது 'பாற்கடல்' ஆகவேண்டும் என்றும், செங்கல், சுவர் இரண்டும் சேர்ந்தால் செங்கற் கவர் ஆகும் என்றும், புல்,