பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#54 பாரதிக்குப் பின் தரை புணரியல் விதிப்படி புற்றரை என்றே எழுதப்பட வேண்டும் என்றும் பண்டிதர்கள் வலியுறுத்தி வந்தார்கள். இதெல்லாம் வீண் வேலை, தேவையற்ற பிரயோகம் என்று முதன் முதலாகக் கண்டித்துச் சொன்ன பெருமை ரசிகமணி டி. கே. சிதம்பரநாத முதலியாரையே சாரும். பேச்சுத் தமிழில் பாற்கடல், புற்றரை, செங்கற் சுவர் என்றெல்லாம் வருவதில்லை; பின் எதற்காக அப்படி எழுத வேண்டும் என்று அவர் கேட்டார். ஆனலும், இத்தகைய இரண்டு சொற்கள் சேர்கையில் ஒற்று மிகும் என்று சொல்வி, பால்-கடல் என்பதை 'பால்க்கடல்’ என்றும்; செங்கல்-சுவர் என்பதை செங்கல்ச்சுவர் எனவும், புல்-தரையை "புல்த்தரை" என்றும் எழுதலாஞர். இந்த வகையான ஒற்றுப் பிரயோகங்களை டி. கே. சி. எழுத்துக் களில் நிறையவே காணலாம். உரை தடையில் புதுமைகள் பண்ண விரும்பிய வ. சா. பேச்சு வழக்கில் ஒற்றுகள் ஒலிப்பதில்லை; எனவே எழுத்திலும் அவை தேவையில்லை என்று வாதிட்டார். செங்கல்-சுவர் செங்கற்சுவர் ஆகவும் வேண்டாம், செங்கல்ச் சுவர் ஆகவும் வர வேண்டாம்; "செங்கல் சுவர் என்றே இருக்க வேண்டும் என்று வ. ரா. உறுதியாகத் தெரிவித்தார். இந்த ரீதியில், பால்-காரன், கீரை-தண்டு என்றெல்லாம் தான் எழுதப்பட வேண்டுமே தவிர, இரு சொற்களுக்கிடையே ஒற்றுகள் தலைகாட்ட வேண்டிய தேவையே இல்லை என்று அவர் வாதிட்டார். இத்தன்மையில் ஒற்றுகளே நீக்கி அவர் எழுதிப் பிரசுரித்த ஒரு புத்தகம் அந்நாட்களில் பலத்த சர்ச்சை களுக்கும் விமர்சனங்களுக்கும் இலக்காயிற்று. உரைநடை பற்றி சித்தித்து, உரை தடையில் சோதனைகள் செய்வதில் ஆர்வம் காட்டிய சி. சு. செல்லப் யாவும் வ. ரா. பாதையில் முன்னேறத் துணிந்தார். ஒத்துகளே நீக்கியும் குறைத்தும் அவர் எழுத்து’