பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை i55 பத்திரிகையில் எழுதிக் கொண்டிருத்தார். இந்தப் போக்கு எழுத்து வாசகர்களிடம் விதம் விதமான அபிப் பிராயங்களை விதைத்தன. ஆதரித்தும், கண்டித்துக், குறைகூறியும் வாசகர்கள் கடிதங்கள் எழுதிஞர்கள். செல்லப்பா தனது கொள்கையை விலக்க வேண்டிய ஒரு கட்டம் ஏற்பட்டதும், உரைநடை வளமாக’ என்ற தலைப்புடன் ஒரு தலையங்கம் எழுதினர். அதில் ஒரு பகுதி இது 'ஒற்றும் கமாவும் இல்லாமல், வாக்கியத்தை சொல்லுக் காக மட்டும் தொடராமல் அர்த்தத்துக்காகவும் தொடர்த்து சென்ருேமாளுல் தடையில் அழகை பார்க்கலாம். தவிர ஒற்றை போட்டாலும் நாம் பாதி உச்சரிப்பு தானே செய்கிருேம். இங்கு ஒரு கேள்ன் கேட்கத் தோன்றும். ஏன், ஒற்று போட்டுவிட்டு நிறுத்தி அதை பாதி உச்சரித்து வாசிக்கலாமே என்று. அதற்கு ஒற்று போடாமலே பாதி உச்சரிப்பை சேர்த்துக் கொள்ளலாமே என்பது தான் பதில் "வாங்கிப் படித்துப் பார்த்தேன்’ என்பதுக்கு பதில் வாங்கி படித்துப் பார்த்தேன்’ நன்ருக இருக்குமே. நமது வல்லினங்கள் புணர்கிற போது இந்த அரை உச்சரிப்புக்கான ஒலியை கிளப்பத்தக்க வீர்யம் அவைகளுக்கு இருக்கத்தானே செய்கிறது. ‘பால்காரன்” என்பதில், ல் லேயும் காவையும் முழுக்க உச்சரித்தால்'க்'இல்லாமலேயே பால்க்காரன்’ என்ற ஒலி கிளம்புகிறது. அதே போலதான் செங்கல்சுவர். "கொஞ்சம் தொல்காப்பியத்தையும் நன்னூலையும் தாண்டிவந்து சிந்திக்கவேண்டும். இலக்கணம் கற்று மறக்கத்தான். அப்போ தான் இலக்கணமாக பேச, எழுத முடியும், இலக்கணத்தையே சதா நினைத்துக்கொண்டு பேசமுடியாது. பழமை, நிலமை, இன்றய, வாங்கிண்டு அல்லது வாங்கிட்டு (வாங்கிக் கொண்டு, ஏன்னுல்