பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை 15 இருந்தார்கள். அவர்கள் உரைநடை யில் உரை எழுதி வைத்திருக்கிரு.ர்கள். சிலப்பதிகாரத்திலும் உரைநடை இருக்கின்றது. இப்படிக் கூறுவோரும் உண்டு. 'ஆல்ை அவற்றில் மோனையும் எதுகையும் தான் மண்டிக் கிடக்கின்றன. பதிமூன்ரும் நூற்ருண்டில் தோன்றிய உரை ஆசிரியர்களுடைய உரைநடையில் ஒர் அழகு தோன்றிலுைம், உரைநடை உருவாகவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்’ என்று தமிழில் உரைநடை என்ற பொருள் பற்றிப் பேசுகையில் ரா. ரீ. தேசிகன் குறிப் பிட்டுள்ளார். "தமிழ் மொழியில் வசனம் என்பது புதிது தான், வசன இலக்கியம் என்று நாம் இப்போது சொல்கின்ற முறையிலே பண்டைத் தமிழ் இலக்கியம் இல்லை என்பதை முதலாவது ஒப்புக் கொண்டாக வேண்டும்" என்று மு. அருளுசிலம் கூறுகிரு.ர். இருந்தாலும், வரலாற்று ரீதியில் முற்கால உ ைநடை, உரைநடை ஆசிரியர்களின் எழுத்துக்கள் முதலியவைகளே ஆராய்ந்து இன்றைய தமிழ் வசன நடையின் பல்வேறு போக்குகளையும் எடுத்துக் காட்டுகிற முயற்சி எதுவும் தமிழில் செய்யப்பட்டதில்லை என்றே சொல்ல வேண்டும். 1930களில், கல்கி ஆனந்த விகடன் பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றி வருகையில், தமிழ் வசன நடையின் சிலவகைகளை மாதிரிகளாக எடுத்துப் பிரசுரம் செய்து வந்தார். பிறகு ஒன்றிரண்டு இலக்கியப் பத்திரிகைகள் பெஸ்கி சாமியாரின் அவிவேக பூரணகுரு சிஷ்யர் கதை’, பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை, ஆனந்தரங்கம் பிள்ளை