பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 பாரதிக்குப் பின் "மன்கவதியின் காலன்டர் பைத்தியம் மற்ற யாருடைய பைத்தியத்திற்கும் இம்மியளவு கூட சளேத்ததல்ல. நீரில்லா நெற்றி பாழ், நெய்யில்வா உண்டி பாழ், ೩೧।। ஊருக்கு அழகு பாழ், பாரில் உடன்பிறப்பு இல்லா உடம்பு யாழ், பாதே மடக்கொடியில்லா மனை' என்ற பாட்டில் கடைசி அடிக்கு பதில் யாழே காலன்டரில்லா வீடு" என்று மாற்றி அமைப்பதுதான் பொருத்தம் என்று கருதும் அளவுக்கு அவனுக்கு அதில் அவ்வளவு சபலம் உண்டு. காலண்டர் என்ருல் அது எத்தகைய உபயோகத்திற்கு பயன்படுமோ அந்த மாதிரி இருத்தால்தான் அவனுக்குப் பிடிக்கும். தேதி பார்ப்பதற்குத் தான் காலண்டர். எனவே தேதி பளிச்சென தெரியாத காலன்டர் எதற்குப் பிரயோசனம்? சுவரில் மாட்டியிருக்கும் காலண்டரில் உள்ள தேதிகள் வீட்டில் தள்ளி எங்கிருந்தாலும் பளிச் செனத் தெரியுக்படியாக இருக்க வேண்டாமா? நான் சிரமப்பட்டு கிழமைகளே விரல் வைத்து உச்சரித்துக் கொண்டே வந்து, அதற்கு நேராக உள்ள வரிசைத் தேதி தப்பிப் போகாமல் விரலால் தடவிக் கொண்டு போய், ஏதோ பெரிய துப்பறிபவன் போல் அன்றையத் தேதியைக் கண்டு பிடிப்பதென்ருல்? சில சமயம் இதல்ை திவருண தேதியை குறித்துக் கொள்ளவும் ஏற்படுகிறது. படத்தின் உபயோகம் வேறு; காலண்டரின் உபயோகம் வேறு. படம் மாட்ட வேண்டுமென்ருல் படமாக மாட்டிக் கொள்ளலாம் என்று மங்கபதி வாதாடுவான்.” (படக் காலண்டர்) சி.சு. செல்லப்பா நகைச்சுவைக் கட்டுரைகளும் எழுதியிருக்கிரு.ர். இது பலருக்கு ஆச்சரியம் தரக்கூடும். “பகடி என்ற புனைபெயரில் அவர் சில பத்திரிகைகளில் அந்த ாகக் கட்டுரைகளை எழுதினர். அவை 5ննո՞ց 6հ) Ա1ւհորց அமைந்திருந்தன. இதற்கு வம்பு பேச என்ற கட்டுரை