தமிழ் உரைநடை
169
யிலிருந்து எடுக்கப்பெற்ற சில பகுதிகள் நல்ல ‘சாம்பிள்’களாகும்—
‘உங்களுக்கு வம்பு பேசப் பிடிக்குமோ? என்று யாரையாவது ஒரு கேள்வி கேட்டுப் பாருங்கள். துடியாக என்ன பதில் வரும் தெரியுமா? எனக்குப் பிடிக்காது என்பது தான். பொதுவாக வர்பு பேசுவதை சற்று கண்யக்குறைவான காரியமாகத் தான் யாரும் நினைப்பது சகஜம். இதை மனதில் கொண்டே ஆண்கள் ‘பெண்களைப் போல நம்மால் வம்பு பேச முடியுமா’ என்கிறார்கள். பெண்களோ இந்த ஆண்கள் வம்பு இருக்கிறதே அதற்கு ஈடு கொடுக்க நம்மால் முடியாது’ என்கிறார்கள். இருசாராரும் தங்களுக்கு அந்தத் திறமையில்லை என்றும் மற்றவர்களுக்குத் தான் இருக்கிறது என்றும் பெருமையாகச் சொல்வது போல் இகழ்ந்து பேசிக் கொள்கிறார்கள்.
இதைவிட ‘ஆமாம், வம்பு பேசும் திறமை எங்களுக்குத்தான் இருக்கிறது. அதற்கு நாங்கள் பெருமைப்படுகிறோம் என்று இருசாராரும் சொல்லிக் கொண்டால் என்ன? சிறுமையாக ஒருவர் கருதி மற்றவருக்குக் கொடுக்கும் அந்தப் பட்டத்தை தாங்களே வலிய அணிந்து கொள்ளக் கூடாது?
ஒரு சாராரை மற்றொரு சாரார் இகழ்வதற்கு காரணம் அவரவருக்கு வம்பு பேசும் திறமையின் நம்பிக்கையில்லாதிருப்பது தான். அதை மறக்கவே ஒருவர் மற்றொருவரைக் கேலி செய்யத் தோன்றுகிறது.
எனக்குப் படுகிறது இதுதான். வம்பு பேசுவது ஒரு தனிக் கலையாகும். இந்தக் கலையை அப்பசிக்கவோ அல்லது ரசிக்கவோ ஒரு பக்குவம் ஏற்படுவதற்கு பயிற்சி வேண்டும். சாதகம் கூட வேண்டும் என்று நிச்சயமாகச் சொல்வேன்.”
பா—11