பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. பலவித நடைகன் பேசுவது மாதிரியே எழுத வேண்டும் என்ற நோக்கு எழுத்தில் பலவிதமான பேச்சு வழக்குகளும் இடம்பெறு வதற்கு வழி வகுத்தது. கதைகளில் இது அதிகமாயிற்று. கதைகள் எழுதுகிற படைப்பாளிகள் அவரவர்களுக்கு நன்கு பரிச்சயமான சூழ்நிலைகள், அங்கே வசிப்பவர்களின் வாழ்க்கை முறைகள், குளுதிசயங்கள், போக்குகள் முதலியவற்றை தங்கள் எழுத்துக்களில் பிரதிபலித்துக் காட்டுவது இயல்பாயிற்து. எனவே, வெவ்வேறு வட்டாசன் களின் பேச்சு மொழிவும், பழக்க வழக்கங்களும், மனித சுபாவங்களும் எழுத்து மூலம் வடிவம் பெற்றன. காலப் போக்கில், வட்டார இலக்கியம்’ என்று பகுத்துப் பார்க்கிற ஒரு மனே பாவமும் எழுத்தாளர் களிடமும் ரசிகர்கள் மத்தியிலும் தோன்றியது. குறிப்பிட்ட ஒரு வட்டாரத்தைச் சேர்ந்த எழுத்தாளர் என்று காட்டிக் கொள்வதற்காக ஒரு சிலர், அந்த வட்டாரத்தின் பேச்சு வழக்குகளையும் அங்கு மட்டுமே வழக்கத்தில் இருக்கிற தனிப் பிரயோகங்களையும் சொல் சிதைவுகளையும் அளவுக்கு அதிகமாகத் தங்கள் எழுத்திலே திணித்து, எழுத்தி நடையின் இயல்பான ஓட்டத்தைக் கெடுத்து ஒரு செயற்கைத்தனத்தை சுமத்தி வைப்பதில்