பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#72 பாரதிக்குப் பின் உற்சாகம் காட்டலாஞர்கள். இந்த மனுேபாவம் எழுத்துக்கும் வனம் சேர்ப்பதில்லை; எழுத்தாளரின் வளர்ச்சிக்கும் வகை செய்வதில்லை. எழுத்தாளனின் திருஷ்டி தேர்ந்தெடுக்கும் பொருளின் விசேஷமும், அவனுடைய கருத்தின் செழுமையும், எண்ணத் தெளிவும், அனுபவ ஆழமும், பார்வை வீச்சும் அவனுடைய படைப்பு கலைத்தன்மை பெறுவதற்குத் துணைபுரிகின்றன. அழகான, வளமான நடை, எழுதி எழுதித் தேர்ந்த பயிற்சியிஞல் வந்து சேரக் கூடும். ஒரு சிலருக்கு இயல்பாகவே அமையவும் கூடும். புதுமைப்பித்தன் திருநெல்வேவிக்காரர்களின் பேச்சு வழக்குகளைத் திறமையாக எடுத்தாண்டார். அவர் காலத்திய திருநெல்வேலி மாவட்டச் சூழ்நிலைகளையும், அங்கு வசித்த மனிதர்களின் வாழ்க்கையையும், விசித்திரப் டோக்குகளையும், விந்தைக் குணங்களையும், குறைபாடுகளையும் தமது கதைகளுக்குரிய விஷயங்களாகக் கொண்டார். என்ருலும், அவர் எல்லாக் கதைகளையும் திருநெல்வேலித் தமிழிலிலேயே எழுதவில்லை. ஒரே ரகமான நடையை அவர் எப்போதும் கையாளவுமில்லே. சொற்களுக்கு ஜீவனுாட்டி எப்படி எல்லாம் அற்புதங்கள் பண்ண முடியுமோ அப்படி எல்லாம் நடைநயம் கண்டு வெற்றி பெற்ருர். புதுமைப்பித்தனின் உரைநடை பற்றி எழுதிய் போதே, இத்தொடரில் இதை நான் குறிப்பிட்டிருக்கிறேன். புதுமைப்பித்தனுக்குப் பிறகு, தொ. மு. சி. ரகுநாதன் திருநெல்வேலி வட்டாரப் பேச்சு மொழியைத் திறமையாகச் சில கதைகளில் பயன்படுத்தியுள்ளார். ஆனைத்தி, ஐந்தாம் படை போன்ற கதைகளில் இதைக் காண முடியும். - 'உள்ளே, மார்பின் மேல் வரிந்துகட்டிய சேலை நெகிழாமல், உடற்கட்டுடன் ஒவ்வொரு அங்கமும்