பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i.74 பாரதிக்குப் பீன் தாமிரபருனி நதிப் போக்கிற்கு பாரா கொடுப்பது போல் திற்கும். பனங்காட்டு வரிசையைக் கடந்து விட்டால், விளாகத் துறையின் பக்கம் நாலேந்து மாமரங்கள் கொண்ட தோப்பும், அதை யொட்டிய துரவுகளும், குடிசைகளும், ரோட்டை யடுத்துள்ள கோயில் குளத்தான் சாராயக் கடையும், செங்கல் சூளையும் ஊழிக்குப் பின் முளைத்தெழுந்த உலகம் போல் புதுமேனியுடன் நிற்கும். ஆற்றங்கரை யோரத்தில், காத்தோப்புக்குச் சமீபமாக, சுடுகாட்டுப் பிராந்திய எல்லைக்குள் சின்னக்கல் கட்டிடம் ஒன்று தெரியும். முன்புறமும் மேல்புறமும் அடைப்பற்றிருக்கும் அந்தக் கட்டிடம் தான் சுடுகாட்டுச் சுடலைமாடன் கோயில்: அரும்:ன்து நசி சுடலைமாடன் என்ருல் அந்தப் பக்கத்து ஜனங்களுக்கு பயமும் பக்தியும் அதிகம்... ... ... நல்ல கருங்கல்வில் வடித்து, மழழைப்பேற்றிய சுடலை மாடசாமி சிலையில் முகத்தில் குந்தம் தள்ளியது போலுள்ள உருண்டையான முன் டக் கண்களும், கடைவாயினின்று கிளம்பி, தாடை வரையிலும் ஒடியுள்ள வீரப்பல்லும், இளித்த வாயில் இடைவெளி தெரியும் பல் வரிசையும் குரூரமாகவும் பயங்கரமாகவும் இருக்கும். சிலையின் ஒரு கரம் ஒடிந்து ஊனமாயிருந்தது...பிறை நிலாக் காலங்களில், இருளில் முகடற்ற மேல் புறத்தின் மூலம் மங்கிய சந்திர ஒளி சிலையின் மீது வழிந்தோடுவதைப் பார்த்து விட்டால், அங்கேயே பயமடித்து ரத்தம் கக்கிச் செத்துப் போவார்கள் என்றும் சொல்வதுண்டு, சிலே அத்தனை கோர ரூபத்துடன் இருக்கும். மேலும், அது பிணந்தின்னிச் சுடலை." கட்டாரித் தேவனைப் பற்றி எழுதும் போது, தடை பின்வருமாறு அமைகிறது: