பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை !75 'கோடைக் காலம் மட்டுமல்லாது, மற்றக் காலங் களிலும் சுடலையை நேர்நின்று தரிசிக்கும் தெம்பும் திராணியும் பெற்றவன் ஒருவன்தான் உண்டு. அவன்தான் கட்டாரித் தேவன். கோழைப்பட்ட மனசுடையவர்களுக்குக் கட்டாசித் தேவனைக் காணவே தைரியம் வேண்டும் சுடலையே உயிர்பெற்று உலாவுவது போலிருக்கும் அவனுடைய தோற்றம். கருமெழுகிலே திரட்டிச் செய்த பவனப் பொம்மை போல், அடிக்கொரு அசைவும் தியிரும் காட்டி, வரிந்து கட்டிய நரம்பு முடிச்சுகளிடையே திருகி விறைப்பேறும் தசைக் கூட்டம் அவனுடைய மேனி வளத்தை எடுத்துக் காட்டும். கத்தியைக் கொண்டு த்திலுைம் உள்ளே இறங்காது என்னும்படி இருக்கும் அவனது தேக வலிமை, அவன் வாயிலிருந்து எப்போதும் சாராய நாற்றம் அடித்துக் கொண்டிருக்கும். ரத்தத்திலே தோய்த்தது போன்ற சாயவேட்டியை தார் பாய்ச்சிக் கட்டியிருப்பான். நெற்றியில், வெட்டப்போகும் கிடாவுக்கு வைத்த அரக்கு சீலேப்போல், கோயில் குங்குமம் தீயாய்த் தெரியும்.' இவ்வாறு, எடுத்துக் கொள்ளும் பொருளுக்கு ஏற்றபடி நடையைக் கையாள்வது எழுத்தாற்றல் பெற்றவர்களின் இயல்பாகும். 'எழிலுடன் நெளிந்தோடும் காவேரி நதிபாயும் தஞ்சை ஜில்லாவின் வாழ்க்கைக் காட்சிகளை தத்ரூபமாக’ சித்திரித்துக் காட்டுகிருர் என்று பெருமை பெற்ற படைப்பாளி தி. ஜானகிராமன். அவருடைய எழுத்துக் களில் தஞ்சாவூர் மண்ணின் மணம் கலந்திருக்கிறது என்று சொல்லப்படுவது உண்டு. "அவருக்கு இயல்பாயுள்ளது ஆதாயாசமாய் துள்ளி யோடும் பேச்சு நடை. தஞ்சை ஜில்லாவின் தனிப்பெருமை