பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை 177 அதான் சொல்றேன், உள்ள வந்திருங்கன்னு. தொண்டை கட்டிக்கிட்டா என்ன செய்யறது? 'தன்னப் பயப்பட்டீர்! வாரும்யா இப்படி..? 'எனக்கு இஞ்ச இருந்தே தெரியுதே." 'கான்ன தெரியுது? உங்களை எல்லாச் சனங்களும், இந்தப் பார்ரு மார்க்கண்டம், இந்தப் பார்ரு மார்க்கண்டம்னு வேடிக்கை பாத்துக்கிட்டு திக்கிறது.' "அடயமனே! நான் அதுக்காக நிக்கலைய்யா காத்துக்காக நிக்கிறேன்.” ‘நல்லா நில்லுங்க. தை மாசத்து ஊதல் தானே. உடம்புக்கு ரொம்ப நல்லது. ஒரே பக்கமாப் பாக்கிறீங்களே, இப்படியும் அப்படியும் திரும்புங்க. கொஞ்சம் அசைஞ் கொடுத்தாத்தானே கடுக்கன் டாலடிக்கிறது தெரியும்.” "அப்புறம்?" "உங்களுக்கு என்ன ஐயா? எல்லா வித்வான் மாதிரியா இருக்கீங்க! நல்ல முகவெட்டு, நல்ல ஒசரம், நடு வயசு, நல்ல படிச்சகளையும் இருக்கு." இப்படி ரசமாகக் கதையை சொல்விக் கொண்டு போவது ஜானகிராமன் நடைநயங்களில் ஒன்று. வர்ணனே நடையும் அவரிடம் தனி நயம் கொண்டதுதான். சண்பகப் பூ கதையின் நாயகி பற்றிய வர்ணிப்பு இதோ 'இந்த இனிமைப் புதையலை எடுத்த தாயும் தந்தையும் விண்னவள் மேனகையும் மன்னவன் விகவாமித்திரனுமா? அதெல்லாம் ஒன்றும் இல்லை. கோசலையம்மாள் எல்லாக் குடும்பத்திலும் காண்கிற தடுத்தர ஸ்திரீதான். பங்கரையா