பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை 179 தேதிக்குப் பிறகு கடன் இல்லாமல் வாழ்ந்ததில்.ே செத்தும் போய்விட்டார். வைத்து விட்டுப் போனது குழம்பு ரசத்திற்குக் காணும். இருந்தும், பெண் ஜட்சு வீட்டுப் பெண்மாதிரி இருக்கிறதே! என்று கிழவரின் மனைவி திகைப்பா ன். மலர்ந்து இரண்டு நாளான கொன்னைப் பூவைப் போல வெண்மையும் மஞ்சளும் ஒன்றித் தகதகத்ததையும் நீரில் மிதந்த கருவிழியையும் வயசான துணிச்சலுடன், கண்ணுரப் பார்த்துப் பூரித்துக் கொண்டிருந்தார். அது என்ன பெண்ணு; முகம் நிறையக் கண்; கண் நிறைய விழி; விழி நிறைய மர்மங்கள்; உடல் நிறைய இளமை. இளமை நிறையக் கூச்சம்; கூச்சம் நிறைய நெளிவு; நெளிவு நிறைய இளமுறுவல், இது பெண் ணு? மனிதனுகப் பிறந்த ஒருவன் தன் ைது என்று அனுபவிக்கப் போகிற பொருளா?" "கிழவருக்கு இந்த எண்ணந்தான் சகிக்க முடியவில்லை." சாதாரணச் சொற்களுக்கு இனிமையும் எழிலும் புதுமையும், உயிரும் உணர்ச்சியும் ஊட்டக் கூடிய ஆறறல் சில கலே உள்ளங்களுக்கு இருக்கிறது. தி ஜானகிராமன் அப்பேர்ப்பட்ட கலைஞர்களில் ஒருவர்.