பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$3:

  • சொர்க்கம்-ஒன்று உண்டு. அது என்னுள் இல்லை; வெளியில் இருக்கிறது. வெளியெல்லாம் நரகம் என்ருல் என்னுள் மட்டும் சொர்க்கம் எப்படி இருக்க முடியும்? அந்தச் சொர்க்கம் முதலில் வெளியில் பிறக்கட்டும். அதன் பிறகு அது என்னுள் வரட்டும்; வரும்.

நான் வெளியில் திரிகிறேன். வெளியிலேயே வாழ் கிறேன். உலகை, வாழ்வை, மனிதர்களைக் கூர்ந்து நோக்கு வதில் மகிழ்கிறேன். கண்டதை, சொன்னதை கேட்டதை எழுதுகிறேன். எதையும் நான் கற்பனை செய்ததில்லை, உலகில் யாரும் எதையும் கற்பனை செய்ததில்லை. ஒரு தலே இருக்கக் கண்டு தான் மனிதன் பத்துத் தலையைக் கற்பனை செய்தான். தலையையே மனிதன் கற்பனை செய்து விடவில்லை. எல்லோருக்கும் தனித் தனியாகத் தெரிந்த உண்மை சளே ஏளுே எல்லோருமே நேர்நின்று பார்க்கக் கூககிருேம். இந்தக் கூச்சம் கூடப் போலிக் கூச்சம்தான். நான் கண்டதை-அதாவது உலகத்தால் எனக்குக் காட்டப் பட்டதை நான் கேட்டதை-அதாவது வாழ்க்கை எனக்குச் சொன்னதை நான் உலகத்துக்குத் திரும்பவும் காட்டு கிறேன்; அதையே உங்களிடம் திரும்பவும் சொல்கிறேன். அது அசிங்கமாக, அது அற்பமாக, அது கேவலமாகஅல்லது அதுவே உயர்வாக, உன்னதமாக எப்படி இருந்த போதிலும் எனக்கென்ன பழி? அல்லது புகழ்? அப்படிக் காட்டும் கருவியாய், கண்ணுடியாய், ஓவியமாய், கேலிச் சித்திரமாய், சோக இசையாய், என் எழுத்து இருந்தது என்பதைத் தவிர, மற்றதெல்லாம் உங்களுடையதுதானே-- அதாவது நம்முடையது தானே!" (இனிப்புக் கரிப்பும் முன்னுரையில்)