பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை 183 "எங்கள் ஊர் ரொம்ப அழகான ஊர். எங்கள் அக்ரஹாரத் தெரு ரொம்ப அழகானது. எங்கள் அக்ர ஹாரத்து மனிதர்களும் ரொம்ப அழகானவர்கள். ஆ இ என்ருல் நீங்கள் என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறீர் களோ எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரை ஒன்றின் நினைவே சுகமளிக்கிறது என்ருல் அது ரொம்: அழகாகத் தானிருக்க வேண்டும். முப்பத்தைந்து வருஷங் களுக்கு முன்னுல் அங்கே, அந்தத் தெருவில் ஒர் பழங் காலத்து வீட்டின் கர்ப்பக்கிருகம் மாதிரி இருளடைந்த அறையில் பிறந்து, அந்தத் தெருப் புழுதியிலே விளையாடி, அந்த ம னிதர்களின் அன்புக்கும் ஆத்திரத்துக்கும் ஆளாகி வளர்ந்து இப்போது பிரிந்து, இருபத்தைந்து வருஷங்கள் ஆன பிறகும் அந்த தினைவுகள், அனுபவங்கள், நிகழ்ச்சிகள் யாவும் நினைப்பதற்கே சுகமாக இருக்கிறதென் ருல, அவை யாவும் அழகான அனுபவங்களும், நினேவுகளும் தானே! நான் பார்த்த ஊரும்-இவை என்றுமே புதிதாக திருக்க முடியாது’ என்ற உறுதியான எண்ணத்தை அளிக்கின்ற அளவுக்குப் பழசாகிப் போன அந்த அக்ர ஹாரத்து வீடுகளும், இவர்கள் என்றைக்குமே புதுமையுற மாட்டார்கள்" என்கிற மாதிரி தோற்றமளிக்கும் அங்கு வாழ்ந்த மனிதர்களும் இப்போதும் அப்படியேதான் இருக் கிருர்கள் என்று என்னுல் நிச்சயமாகச் சொல்ல முடியாது. எனினும் அவர்கள் அப்படி இருக்கிரு.ர்கள் என்று நினைத்துக் கொள்வதிலே ஒரு அழகு இருக்கிறது; சுகம் இருக்கிறது.” (அக்ரஹாரத்துப் பூனே) பட்டணத்துக் குப்பங்களில் வசிக்கிற சாதாரண மக்களின் பேச்சுநடையையும், பிராமணர்களின் பேச்சு தடையையும் ஜெயகாந்தன் தனது கதைகளில் ஆற்றலுடன்