பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 பாரதிக்குப்பின் கையாண்டிருக்கிரு.ர். அழகுக்காக, சோதனைக்காக திறமை யைக் காட்டுவதற்காக என்றெல்லாம் அவர் நடைநயம் பயிலவில்லை.

சிக்கலான புதிர்களையோ, ஜாலங்கள் எனும் கழைக் கூத்தாடித்தனத்தையோ கணநேரத் துடிப்பு என்ற திருப்பங்களையோ, தித்திப்பை நாக்கில் தடவும் வர்ணனை களையோ, உடை களைகிற நிலை வரை உடன் சென்று குறிப் பெழுதும் மார்க்கெட் விவகாரங்களேயோ எனது வாசகர் என்னிடம் எதிர்பார்க்க மாட்டாரென்று நம்புகிறேன். எனது கதைகளில் பல நயங்களே உணர்ச்சிகளை, அர்த்தங் களை நான் அமைதியாக அதே சமயத்தில் நுட்பமாகச் சொல்லிச் செல்கிறேன்" (புதிய வார்ப்புகள் முன்னுரை யில்) என்று அவர் குறிப்பிட்டிருப்பது நினைவுகூரத் தகுந்தது.

தனது கதைகள் பற்றி ஜெயகாந்தன் கூறியுள்ள இன்னுெரு கருத்தையும் குறிப்பிட வேண்டும்:

  • பொதுவாக வாழ்க்கையே சிக்கல் மிகுந்தது என்பது ஒரு புரியாத சூத்திரம் அல்ல. சிக்கல் மிகுவதனலேயே வாழ்க்கைக்கு ஒர் அர்த்தமும் அதன் மீதொரு பற்றும் தமக்கு அதிகரிக்கிற தென்பது சற்றுச் சிந்தித்தால் புரிகிற விஷயம். எவ்வளவுதான் சிக்கல் மிகுந்திருந்த போதிலும், வாழ்க்கையின் ஒவ்வொரு பிரச்னேயிலும் முரண்பாடுகளே மலிந்திருப்பினும், மனித வாழ்க்கையின் பொதுவான கதி உன்ன ஆகாய்த்தான் இருக்கிறது என்பது வாழ்க்கையை ஒரு வெறியோடு வாழ்ந்து அனுபவித்தவர்கள் மட்டுகே உணரத்தக்க ஒரு ஞானம். .

தீயவன் என்று அனைவராலும் தீர்ப்பளிக்கப்பட்டவன் கூடத் தீமையை வேறுப்பதில் அதை திதர்சனவாய்க்