பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. நீல. பத்மநாபன் தமிழ் நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலும் வசிக்கிற எழுத்தாளர்கள், அவரவர் வட்டாரத்துக்கே உரிய பேச்சு மொழியையும் வழக்குச் சொற்களையும் தங்கள் எழுத்துக் களில் தாராளமாகக் கலந்து எழுதும் வழக்கத்தை கைக் கொண்டதும், தமிழ் உரைநடை பல்வேறு சாயல்களையும், பலவிதமான விசேஷத் தன்மைகளையும் ஏற்றது. தமிழ் நாட்டுக்கு வெளியே வாழ்கிற தமிழ் இனத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களின் கையில் தமிழ் உரைநடை மேலும் புதிய சாயைகளேப் பெற்றிருக்கிறது என்று கூறலாம். ஈழநாட்டின் தமிழும், நாஞ்சில் நாட்டுப் பேச்சு வழக்குகளும், கேரளத் தமிழும் தமிழ் உரைநடைக்கு வளமும் புதுமையும், ஒரு தனித்தன்மையும் சேர்த்துள்ளன. இவ்விதம் தனித்தன்மை பெற்ற உரைநடையைக் கையாள்கிறவர்களில், திருவனந்தபுரம் எழுத்தாளர் நீல. பத்மநாபன முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். நீல. பத்மநாபனின் உரைநடை பற்றி எண்ணுகையில், எழுத்தாளர் அசோகமித்திரன் கல்கத்தா தமிழ் மன்றம் வெளியிட்ட மலர் ஒன்றில் தமிழ் உரைநடை குறித்து எழுதியபோது கூறியுள்ள கருத்துக்கள் என் நினைவுக்கு வருகின்றன. தமிழ் உரைநடையில் உணர்வு பூர்வமாகப் புதுமை செய்திருப்பவர் நீல. பத்மநாபன் தான் என்றும்