தமிழ் உரைநடை
189
யோரத்தில் இருந்த பனைமரங்களில் இருந்து பனங்காய்கள் பழுத்து டொப்டொப்புண்ணு கீழே விழுந்தன. திரவி அதை எடுக்க ஓடினபோது பொணமு ஆச்சி சத்தம் போட்டாள்:
லே, சும்மா எடுத் திராதலெ கொல்லா! காறித் துப்பிட்டு எடு. பனை முட்டில் ராத்திரி காலத்தில் பூதத்தான் நிப்பான்.
அவ்வாறு காறித் துப்பிவிட்டு பனங்காய்களை எடுத்துக்கிட்டு ஓடிவந்தான் திரவி. சும்மாவா? பனங்காய்க்கு இருக்கும் ஒரு பிரத்தேக மணத்தையும் ருசியையும் அதைத் திண்ணுப் பாத்திருக்கும் அவனுக்குத் தானே தெரியும்!”
“தெரு நடையை பெருக்குவதற்கிடையில் ‘யோக்கியரு வாறாரு, செம்பெடுத்து உள்ளே வை’யிண்ணு பொணமு ஆச்சி மரியாதை ராமியாக ‘சவச்களிஞ்ச பேச்சு’ பேசத் தொடங்கி விட்டதைக் கேட்டு, ஆச்சி திரவியத்தைப் பார்த்து ஒரு கள்ளச் சிரிப்பு சிரித்தாள்.”
“மனசு மொலு மொலூண்ணு தவிச்சுக்கிட்டே
இருந்தது. வீட்டிலே இருக்கும்போது ஆனாலும் சரி, பள்ளிக்கூடத்துலே இருக்கப்பட்ட சமயம் ஆனாலும் சரி, மனசுலே என்னமோ பாரம் எடுத்து வச்சாப்பலே ஒரு வேவலாதி! புஸ்தகத்தை எடுத்துப் படிக்கக் கூட வீட்டிலே தன்னை அஞ்சாறு நாளா ஆரும் நிர்ப்பந்திப்பது கிடையாது. கூட்டாளிகளுக் கெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் தெரிய ஆரம்பிச்சு எல்லாவனும் ஒரு மாதிரியா பாக்க அரம்பிச்சப்பம் கொறச்சலாட்டு இருந்தது. தெருவிலும் ரோட்டிலும் நடக்கப்பட்ட சமயம் ஆளுகளின் உபத்திரவம் கேக்காண்டாம்!”