உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் உரைநடை

193

‘கண்முன்னால் பிரத்யட்சப்பட்டு விடும்’

‘ஆச்சி வியாக்கியானித்தாள்.’

‘அனைத்தையும் வேதாந்தீகரித்துக்காட்ட’

‘தன்னுடைய வாழ்வில் ஒரு துர்பல நிமிஷத்தில் ஒரு சபல எண்ணம் சாட்சாத்கரிக்கப்படுவதை வெளிச்சத்தில் தரிசிக்க அவன் கண்கள் கூசத்தான் செய்தன.’

‘மினுக் மினுக்கென்று தூங்கி வழிந்து கொண்டிருந்த சிம்ணி விளக்கும் அரூபியாகி விட்டதால் குடிசையும் அப்பிரத்யக்ஷமாகி இருந்தது.’

உதாரணங்கள் போதும், இவற்றை கவனித்தாலே, இவர் தேவையில்லாமல் சமஸ்கிருத பதங்களை அளவுக்கு அதிகமாகக் கையாள்கிறார் என்பது புரிந்து விடும். வாசகர்களில் பலர் இதைப் பெரும் குறையாகக் கருதுகிறார்கள். இதையும் ஒரு தனிச் சிறப்பாக நீல. பத்மநாபன் மதிக்கிறாரோ என்னவோ!

சில இடங்களில் இவர் தமிழில் வழக்கமாக எழுதப்படாத விதத்தில் சொற்களைக் கையாள்கிறார். ‘பிரத்யேகமாக’ என்பதை ‘பிரத்தேகமாக’ என்றே எழுதுகிறார்.

‘அவனிடம் அறிவித்தான்’ என்ற அர்த்தத்தில் ‘அவனை அறிவித்தான்’ என்று தான் எழுதுகிறார். ‘அவன் ஒளியை பயந்தான்’ என்று குறிப்பிடுகிறார்.

ஆங்கில வார்த்தை அமைப்புகளின் நேரடி மொழிபெயர்ப்பு போல் தொனிக்கும் இத்தகைய பிரயோகங்கள் கேரளத் தமிழில் வழக்கில் இருக்கின்றனவோ என்னவோ—எனக்குத் தெரியாது.

கேரளத் தமிழின் சில வழக்குச் சொற்கள் தமிழக வாசகர்களுக்குப் புரியாது போகலாம் என்ற நினைப்பில்